இலங்கை தமிழ் எம்பி ரவிராஜ் சுட்டுக் கொலை-புலிகள் தாக்கி 25 கடற்படையினர் பலி
கொழும்பு:இலங்கையின் முக்கிய தமிழ் எம்பிக்களில் ஒருவரான நடராஜா ரவிராஜ் இன்று காலை கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ரவிராஜா, யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்.இருமுறை யாழ்பாண மேயராகவும் இருந்தவர். வகாரையில் தமிழ் அகதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி 47பேரைக் கொன்றதை எதிர்த்து நேற்று நடந்த போராட்டத்தில் ரவிராஜ் பங்கேற்றார்.
இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஒரு டிவி நிலையத்தில் பேட்டி அளித்துவிட்டு கொழும்புநரஹென்பிட்டியாவில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார். வீட்டின் அருகே வைத்து அவர் சுடப்பட்டார்,இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து மிகவும் கவலைக்கிடமாந நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.ஆனால், அங்கு அவரது உயிர் பிரிந்தது. அவரது பாதுகாவலரும் இத் தாக்குதலில் பலியானார்.
புலிகள்-கடற்படை மோதல்-30 பேர் பலி:
இதற்கிடையே புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையே நேற்றிரவு நடந்த பயங்கர மோதலில் 30 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ்பாத்தின் வெட்டிலைக்கெர்னி என்ற இடத்தில் கடற்படைக் கப்பலுக்குத் துணையாக சென்றகடற்படையினரின் படகுகள் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் கடற்படையினரின் 2 படகுகள் நீரில்மூழ்கின. இதில் 25 வீரர்கள் பலியாகினர்.
புலிகள் தரப்பில் 5 பேர் பலியாகினர். மேலும் கடற்படையின் 2 அதிவேக படகுகளையும் புலிகள்கையப்படுத்தினர். அதிலிருந்த ஆயுதங்கள், துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு இரு படகுகளையும் வெடிவைத்து தகர்த்துவிட்டனர்.
மேலும் பலியான ஒரு கடற்படை வீரரின் உடலையும் புலிகள் கைப்பற்றி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
இன்று காலையும் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையே மீண்டும் பயங்கர சண்டை நடந்தது. இதில் ஒருகடற்படை படகு சேதமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications