நீரே தராமல் ஓவர் பேச்சு பேசும் கேரளா

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசியுள்ளதற்கு தமிழகபொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நெய்யாற்றிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளதாக கடந்த 2 மாதமாகஅச்சுதானந்தன் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் இதுவரை நெய்யாற்றிலிருந்து கேரள அரசுதண்ணீரையே திறந்து விடவில்லை என்பதுதான் உண்மை.

அதுமட்டுமல்லாது, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில், தமிழகத்தின் நடவடிக்கை ஆத்திரமூட்டுவதாகஉள்ளதாகவும் அச்சுதானந்தன் கூறியுள்ளார். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

பக்கத்து மாநிலங்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக இருக்கிறார்.எனவேதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர்அணைக்குச் செல்வதையும், பார்வையிடுவதையும், அதற்குப் பிறகு தமிழக அரசுக்கு எதிராக கருத்து சொல்வதுகுறித்தும் பதில் கருத்து சொல்லாமல் மிகுந்த பொறுமை காத்து வருகிறோம்.

தமிழகத்தின் பக்கம் நியாயம் உள்ளது என்பதால்தான் சமீபத்தில நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கேரளாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று முடிவெடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் செயல் ஆத்திரமூட்டுவதாக உள்ளதாக அச்சுதானந்தன் கூறுவதில் என்னகாரணம் உள்ளது, நியாயம் உள்ளது?

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் கதவுகளை இறக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதநிலையில், கதவுகளை இறக்கினால் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பது எந்தவிதத்தில் நியாயமாகும் என்று கூறியள்ளார் துரைமுருகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+