மதுரை, கோவை, ஈரோட்டில் பேய் மழை!
மதுரை:மதுரை, கோவை, ஈரோட்டில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால்மூன்று நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரில் நேற்று விடிய விடிய கன மழை பெய்தது. மழை நீர் மற்றும் வைகைஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ள நீர் ஆகியவை காரணமாக நகரின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மதுரையில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார். வைகை ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டோடி வருவதால் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் மக்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆற்றோரம் உள்ள செல்லூர் உள்ளிட்ட சில பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர்புகுந்தது. இதேபோல கோவையிலும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் பலகுளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
ஈரோட்டிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை மழை வெளுத்து வாங்கியது.இதனால் பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைவெள்ளம் காரணமாக 1800 குடிசைகள் நீரில் மூழ்கின.
அங்கு வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் அருப்புக்கோட்டை, மணியாச்சியில் அதிகபட்சமாக 9 செமீமழை பெய்துள்ளது.
சென்னை நகரில் இன்று காலை மழை சற்றே ஓய்ந்தது. இருப்பினும் பிற்பகலுக்குமேல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாககாணப்படுகிறது. லேசான தூறலும் காணப்படுகிறது.
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம்அதே இடத்தில் தொடர்ந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும்பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications