தமிழகம் முழுவதும் ரெளடிகள் வேட்டை தீவிரம்
சென்னைதமிழகம் முழுவதும் போலீஸார் மீண்டும் ரெளடிகளை வேட்டையாடி பிடிக்கத்தொடங்கியுள்ளனர்.
சென்னை நகரில் சமீபத்தில் நடந்த இரண்டு பட்டப் பகல் கொலைகள் நகரமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில்ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டத்திற்கு இடையே ஒரு ரெளடி வெட்டிக்கொல்லப்பட்டான்.
இதேபோல சமீபத்தில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முன்பு டில்லி பாபு என்றரெளடி ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டான். இந்த இரு கொலைகளும் நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைநடத்தி சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதித்தார். இக்கூட்டத்தில் ரெளடிகளின்கொட்டத்தை ஒழிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முதல் சென்னை மாநகர காவல்துறையினர் ரெளடிவேட்டையைத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் 180க்கும் மேற்பட்டரெளடிகளை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
மாநகர கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பல்வேறுதனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய ரெளடி வேட்டை நடந்தது. பழையகுற்றவாளிகள், ஜாமீனில் வெளிவந்த ரெளடிகள், நீண்ட காலமாக தேடப்பட்டு வரும்ரெளடிகள் என அனைவரையும் பட்டியலிட்டுப் போலீஸார் வளைத்துப் பிடித்துவருகின்றனர்.
சென்னை மாநகரம் முழுவதும் நடந்த வேட்டையில் மொத்தம் 629 பேர் பிடிபட்டனர்.இவர்களில் 180 பேர் பயங்கர ரெளடிகள். 7 பேர் பழைய குற்றவாளிகள். 17 பேர்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்கள்.
துரைப்பாக்கம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கடல் பன்றி என்றபிரபு உள்ளிட்ட 6 ரெளடிகளை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். இவர்கள்துரைப்பாக்கம் பகுதியில் கத்தி முனையில் பணம் பறிப்பது, மாமூல் கேட்பது, கூலிக்குஆட்களை அடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள்.
அதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ரெளடிகள் வேட்டை தீவிரமாகியுள்ளது.தனிப்படைகளை அமைத்து ரெளடிகளை அமுக்கி உள்ளே போடும் வேலையில் சரகங்களின் டிஐஜிக்களும்,மாவட்ட எஸ்பிக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ரவுடிகள் வேட்டை தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால்,ஒவ்வொரு முறையும் ஏதாவது கொலை நடந்த பின்னர் இப்படிப்பட்ட வேட்டைகளைநடத்துவதைத் தவிர்த்து இது நிரந்தரமாக நீடிக்க வேண்டும், ரெளவுடிகளை அறவேஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications