அதிரடிப்படையின் காம வேட்டை: பெண் கதறல்
சென்னை:வீரப்பன் வேட்டையின்போது இளம் வயதில் இருந்த தன்னை அதிரடிப்படை வீரர்கள்கடத்திச் சென்று 8 மாதம் மாறி மாறி கற்பழித்து சித்திரவதை செய்ததாக மலை கிராமபெண் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தமிழக அரசு அதிரடிப்படையை நியமித்தது.இவர்களுக்கு ஓவர் சுதந்திரம் தரப்பட்டது. இதனால் இந்தப் படை படையில்இடம்பெற்றிருந்த போலீஸார் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள்குவிந்தன.
மலைவாசிகளை அடித்து உதைப்பது, மர்ம உறுப்புகளில் மின்சாரத்தை பாய்ச்சுவது,பெண்களை கற்பழிப்பது, சந்தன மரம் திருடுவது, மான்களை வேட்டையாடி திண்பதுஎன பல தரப்பான புகார்கள் வந்தன.
தமிழக அதிரடிப்படைக்கு இணையாக கர்நாடக அதிரடிப்படையும் பலஅநியாயங்களைச் செய்தது.
இதையடுத்து இந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க சதாசிவம் கமிஷனும்நியமிக்கப்பட்டு, அந்தக் கமிஷனும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன் மீதுஇதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை.
இந் நிலையில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டோர் மறு வாழ்வுக்கான பிரசாரஅமைப்புகளின் சார்பில், சென்னையில் இன்று மாநாடு நடந்தது. இதில்அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது முத்துலட்சுமி என்ற மலை கிராமப் பெண் கண்ணீர்மல்கப் பேசியதாவது:
நான் அப்போது இளம் வயதில் இருந்தேன் (இப்போது வயது 28). எனது தந்தையைதேடி போலீஸார் வந்தனர். என்னை காட்டுக்குள் கூட்டிச் சென்றனர். அங்கு என்னைக்கட்டி வைத்து அடித்து, சூடு போட்டனர். பின்னர் சில போலீஸ்காரர்கள் என்னைவெறித்தனமாக கற்பழித்தனர்.
இப்படியே கிட்டத்தட்ட 8 மாதம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து மாறி மாறிகற்பழித்தனர். அதிரடிப்படை முகாமில் அவர்களிடம் நான் படாதபாடு பட்டேன்.அதன் பின்னர் என்னை விட்டு விட்டனர் என்றார் முத்துலட்சுமி.
இதேபோல சக்கரையான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கூறுகையில், நாங்கள்வீரப்பனைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் நாங்கள் அவனுக்கு உதவினோம்என்று சொல்லி எங்களைப் பிடித்து தடா வழக்கில் சிறையில் அடைத்தனர். மின்சாரஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தினர். காலில் ஆணி அடித்து சித்திரவதை செய்தனர்.
நாங்கள் இருவரும் சிறைக்குப் போய் விட்டதால், எங்களது குழந்தைகள்பிச்சையெடுத்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போதும் கூட இந்தவழக்குக்காக நாங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறோம்.
வீரப்பன் வாழ்ந்த மலை கிராமத்தில் பிறந்ததுதான் நாங்கள் செய்த பாவம் என்றுகூறிவிட்டு கதறி அழுதனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications