திமுக பேரணியில் இறந்தவர் குடும்பத்துக்கு உதவி
சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கடற்கரையில், நடந்த திமுக பேரணியில் நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்த நாகை வாலிபரின் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதி ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவியைவழங்கினார்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற நிலையில் சென்னை கடற்கரையில் திமுக சார்பில்பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியின் போது ரெளடிகளை களமிறக்கிவிட்டது அதிமுக அரசு.தாதா வீரமணி தலைமையிலான கும்பல் பேரணிக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டினர்.
இதில் நிருபர்களும் தப்பவில்லை. போலீசாரும் ரெளடிகளுக்குத் துணையாக திமுகவினர் மீதும் நிருபர்கள் மீதும்தடியடி நடத்தினர்.
போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செல்வ ரமேஷ்குமார் என்ற திமுக தொண்டர் உயிரிழந்தார்.
இவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தற்போது நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த செல்வ ரமேஷ்குமாரின் தாயார்தனலட்சுமி, நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தென்பாதி கற்பகம் நகரில் வசித்து வருகிறார்.
அருமை மகனைப் பறி கொடுத்து விட்டு ஏழ்மை நிலையில் அவர் வாழ்ந்து வருகிறார். எனவே தனலட்சுமிக்குதமிழக அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முதல்வர் கருணாநிதிவழங்கினார்.
மேலும் உயிரிழந்த செல்வ ரமேஷ்குமாரின் தம்பி கணேசனுக்கு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கருணைஅடிப்படையில், இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவையும் முதல்வர் வழங்கினார் என்றுகூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications