இன்டர்நெட் சில்மிஷம்-இங்கிலாந்து நபருக்கு சிறை
லண்டன்:டீன் ஏஜ் வாலிபர் போல இன்டர்நெட் சாட்டிங் மூலம் சிறுமிகளை கவர்ந்திழுத்து, பின்னர் தன்னுடன் அவர்கள்பேசியதை பெற்றோர்களிடம் கூறி விடுவதாக மிரட்டி அச்சிறுமிகளை ஆபாச புகைப்படம் எடுத்த இங்கிலாந்துநபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு இங்கிலாந்தின் இல்கெஸ்டன் நகரைச் சேர்ந்தவர் அட்ரியான் ரிங்லேண்ட். 36 வயதான இவர் தனதுசெக்ஸ் வக்கிரத்திற்காக நூதன வழியைக் கையாண்டார்.
அதாவது தன்னை 13 வயது பையன் போல காட்டிக் கொண்டு இன்டெர்நெட் சாட்டிங் மூலம் 13 முதல் 15 வயதுவரையிலான சிறுமிகளிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
அவர்களுடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்ட பின்னர், தன்னுடன் தொடர்பு வைத்துள்ள சிறுமிகளுக்குசாட்டிங் மூலமாக, தனது 13 வயது புகைப்படத்தை அனுப்பி வைப்பார். கூடவே, டிரோஜன் ஹார்ஸ் என்றவைரஸ் புரோகிராமையும் அனுப்பி வைப்பார்.
அந்த வைரஸ் மூலமாக அச்சிறுமிகளின் கம்ப்யூட்டர்கள் ரிங்லேண்ட் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும். அதன்பின்னர் ஆபாசமான படங்கள், வாசகங்களை அச்சிறுமிகளின் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைப்பார் ரிங்லேண்ட்.இதை வைத்து அச்சிறுமிகளை மிரட்ட ஆரம்பிப்பார்.
தனது கம்ப்யூட்டரில் இருந்தபடியே அச்சிறுமிகளின் கம்ப்யூட்டர் மானிட்டர்களை ஆன் செய்தும், ஆஃப்செய்தும், பிரிண்டர்களை ஆன் செய்தும் ஆஃப் செய்தும் அச்சிறுமிகளை மிரட்டியுள்ளார் ரிங்லேண்ட்.
உனது கம்ப்யூட்டரில் ஆபாச படங்கள் உள்ளதையும், வாசகங்கள் உள்ளதையும் உனது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன். அதை சொல்லாமல் இருக்க வேண்டுமானால் உன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க சம்மதிக்கவேண்டும் என்று மிரட்டுவார் ரிங்லேண்ட்.இதற்கு ஒத்துக் கொண்டு பலர் ஆபாச புகைப்படத்திற்கு ஒத்துழைத்துள்ளனர். பின்னர் அந்தப் படங்களைவைத்துக் கொண்டும் அச்சிறுமிகளை மிரட்டி பல வகையில் காரியத்தை சாதித்துள்ளார் ரிங்லேண்ட்.
ரிங்லேண்ட்டின் இந்த செக்ஸ் வக்கிர செயலால் பாதிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சிறுமி லண்டன் போலீஸில்புகார் கொடுத்தார். இதையடுத்து ரிங்லேண்ட் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தத்தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே சில முறை இதேபோன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு ரிங்லேண்ட் ஜாமீனில் விடப்பட்டார்.அதன் பின்னர் அவர் 13 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த சிறுமியை தனது செக்ஸ்வடிகாலுக்காக பயன்படுத்திக் கொண்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மீதானஅநாகரீகமாக நடந்து கொண்டது, மிரட்டியது, ஆபாசப் புகைப்படங்கள் எடுத்தது, 13 வயது சிறுமியுடன்கட்டாயப்படுத்தி தகாத முறையில் உறவு கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரிங்லேண்டால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 13 முதல் 15 வரைதான் இருக்கும். அனைவரும் இங்கிலாந்து,கனாட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications