வேலையற்றோர் உதவித் திட்டம் இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று திருச்சியில்தொடங்கி வைக்கிறார்.
படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளைத் தாண்டியும்வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
அதன்படி பத்தாவது வகுப்பு முடித்தோருக்கு மாதம் ரூ. 150 நிதியுதவியும், பிளஸ் டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.200 உதவியும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 400 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ. 4 கோடி செலலாகும்.
இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திருச்சி அண்ணா விளையாட்டுஅரங்கத்தில் தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications