ஐரோப்பாவைத் தாக்க அல் கொய்தா சதி
வாஷிங்டன்:ஐரோப்பாவின் ரயில் மற்றும் விமான போக்குவரத்தை தாக்கி முற்றிலும் சீர்குலைக்க அல் கொய்தா அமைப்புதிட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அரபு மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், அல் கொய்தாவின் இந்த சதித் திட்டம் தெரியவந்திருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது. இந்த சதித் திட்டத்தில் ஈடுபட விருப்பவர்கள்ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் சமீபத்தில் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டஇடங்களுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர் என்றும் அத்தகவல் கூறுகிறது.
அல் கொய்தா அமைப்புடன் தொடர்பு கொண்ட சிலரை அமெரிக்க புலனாய்வுத்துறை தனது பிடியில் கொண்டுவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், லண்டன் ஹீத்ரு விமான நிலையம் தாக்குதல் பட்டியலில்முதலிடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனிலிருந்து அமெரிக்கா புறப்படும் விமானங்களைக் கடத்தி தகர்க்கதிட்டமிடப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போதும் அதேபோன்ற ஒரு திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உள்ள ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தைத் தாக்கித் தகர்க்கஅல் கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும்நேரத்தில் இந்த தாக்குதலை நடத்த அல் கொய்தா திட்டமிட்டுள்ளது.
தாக்குதலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அல் கொய்தா செய்து முடித்து விட்டதாகவும், தாக்குதலை நடத்ததயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல, இங்கிலாந்து நாட்டின் புலனாய்வு நிறுவனமான எம்ஐ15 வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில்,இங்கிலாந்தில் உள்ள 30 முக்கிய இடங்களில் தீவிரவாதத் தாக்குதலை நடத்த முஸ்லீம் தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications