குறளை அழித்து கருணாநிதியின் பொன்மொழிகள்
சென்னை:தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திருக்குறளை அழித்து விட்டுஅதற்குப் பதில் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் எழுதப்பட்டிருப்பதற்குஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் ராமதாஸும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக்குவரத்துக் கழகபேருந்துகளில் காலத்தால் அழியாத திருக்குறள் இடம் பெற்றிருந்தது. ஆனால்தற்போது திருக்குறளை அழித்து விட்டு அந்த இடத்தில் கருணாநிதி எழுதியதையும்,பேசியதையும் பொன் மொழி என்ற பெயரில் எழுதி வருகிறார்கள்.
திருக்குறளை அரசுப் பேருந்துகளில் எழுதுவதற்குக் காரணம் பேருந்தில் பயணம்செய்யும் மக்கள் குறிப்பாக, மாணவ, மாணவியர் அதைப் படித்து அதன்படிவாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
பெரிய தலைவர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், மகான்கள் ஆகியோர் தங்கள்வாழ்நாளில் வெளியிட்ட கருத்துக்களை அவர்களின் மறைவுக்குப் பின்னர் சமுதாயம்ஏற்று அவற்றை பொன்மொழிகள் என்று போற்றி மகிழ்வார்கள்.
அப்படிப்பட்ட சான்றோர்கள் தங்களுடைய எழுத்துக்களை ஒருபோதும்பொன்மொழிகள் என்று அவர்களே சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்அவர்கள் சான்றோர்கள்.
வள்ளுவருக்கு சிலை எடுத்து அவரை அய்யன் திருவள்ளுவர் என்றெல்லாம்அழைத்தவர் இன்று வள்ளுவரையும் மிஞ்சும் அளவுக்கு புலமை பெற்றவர் போலதன்னுடைய பொன்மொழிகளை அரசுப் பேருந்துகளில் பொருத்துவது வள்ளுவரைமட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழினத்தையே சிறுமைப்படுத்துவதாகும்.
எனவே உடனடியாக மீண்டும் திருக்குறளை அனைத்துப் பேருந்துகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக மிகப் பெரிய போராட்டம்நடத்தும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ராமதாஸ் கண்டனம்:
இதேபோல திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்ராமதாஸ் இதுகுறித்துக் கூறுகையில், அரசுப் பேருந்துகளில் திருக்குறளை அழித்துவிட்டு வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications