டிசம்பரில் 2வது கட்ட இலவச நில வினியோகம்
சென்னை:விழுப்புரத்தில் டிசம்பர் 17ம் தேதி 2வது கட்ட இலவச நிலம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 17ம் தேதிபெரியார் பிறந்த நாளன்று முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்ட நிகழ்ச்சியில்,23,440 குடும்பங்களுக்கு 26,320 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போது இரண்டாவது கட்டமாக இத்திட்டம் வரும் டிசம்பர் 17ம் தேதியன்று விழுப்புரத்தில் நடைபெறுகிறது.இந் நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டு 2வது கட்ட நில வினியோகத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
விழுப்புரம் விழாவில் 26,000 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அன்றைய தினம் பிறமாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் 2வது கட்ட விவசாய நிலம் வழங்கும்திட்டம் நடைபெறும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications