ரவிராஜ் கொலை ஒரு பூகம்ப அதிர்வு-பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:சாவகச்சேரி எம்.பி.நடராஜ ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு பூகம்ப அதிர்வாக அமைந்துள்ளது.அவருக்கு மாமனிதர் விருதை அளிக்கிறேன் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்தெரிவித்துள்ளார்.

வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரியிலிருந்து எம்.பியாகதேர்ந்தெடுக்கப்பட்டவர் ரவிராஜ். தமிழர்களிடையை செல்வாக்குடன் திகழ்ந்தவர்.இலங்கை அரசு மற்றும் பாதுகாப்புப் படையினர் தமிழர்கள் மீது நடத்தி வரும்அத்துமீறல்களைக் கண்டித்து குரல் கொடுத்து வந்தவர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஆதரவானவர். இந் நிலையில், நேற்றுகொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து அவரை மோட்டார் சைக்கிளில் வந்தஒரு மர்ம நபர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றார். இந்த சம்பவம் இலங்கைத்தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசின் சதிதான் இந்தப் படுகொலை என தமிழர்களிடையே கருத்துநிலவுகிறது. மேலும் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசே ரவிராஜ் கொலைக்குக்காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந் நிலையில் ரவிராஜ் படுகொலை குறித்து பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்தி:

தாயகத்தின் விடுதலை ஜோதியை தனது நெஞ்சில் எப்போதும் ஏற்றியிருந்த ஒரு ஆத்மா, சிங்களஆதிக்கவாதிகளின் வேட்டைக்குப் பலியாகியுள்ளது. இந்த பயங்கர செய்தியின் அதிர்ச்சி, ஒரு பூகம்பஅதிர்வாகவே எமக்குத் தோன்றுகிறது.

நமது தாயகத்தின் ஆத்மாவை இது அதிர வைத்து விட்டது. தினசரி சிங்கள அடக்குமுறையாளர்களின் கையில்சிக்கி உயிரிழந்து கொண்டிருக்கும் நமது மக்களின் வேதனையை இது மேலும் அதிகரித்துள்ளது.

நடராஜா ரவிராஜ் மிகச் சிறந்த மனிதர், மாமனிதர். சிறந்த அரிய குணாதிசயங்களைக் கொண்டவர் அவர். சுயலாபங்களுக்கு அடிபணியாதவர் அவர். தமிழ் மக்கள் மீதும், தமிழர் தாயகம் மீதும் மிகுந்த அன்பும், ஆழமானகவலையும் கொண்டவர் அவர்.

மிக வித்தியாசமான அரசியல்வாதியாக திகழ்ந்தார் ரவிராஜ். சட்டத்தையும், நீதியையும் ஆழமாக அறிந்தவர்அவர். மிகுந்த தைரியசாலி. இதயத்தின் ஆழத்திலிருந்து உதவும் குணம் படைத்தவர். தூய்மையான எண்ணம்கொண்டவர்.

தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் ரவிராஜ். தமிழ் மக்களின்மோசமான வாழ்நிலை சிறு வயதிலிருந்தே அவரை கவலை கொள்ளச் செய்தது. அதன் காரணமாகவே சுதந்திரப்போராட்டப் பாதைக்கு அவர் தள்ளப்பட்டார்.

தனது முழு மனதுடன் விடுதலை புலிகளை அவர் ஏற்றுக் கொண்டார். நாட்டுக்குத் தேவையானவற்றைநிறைவேற்றுவதில் அவர் முழுமையாக ஈடுபட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பல வழிகளில் அவர்உதவியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ் மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் தீவிரமாக, ஓய்வின்றி பாடுபட்டார்.சிங்கள புத்த மத வெறியர்களின் தீவிரவாதம் குறித்து உலகெங்கும் கேட்கும்படி உரத்த குரலில் எடுத்துரைத்தவர்அவர். சிங்கள அரசின் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் உண்மைகளை எடுத்துரைத்தவர் ரவிராஜ்.இதற்கு அவரது சட்ட அறிவும் துணை நின்றது.

தாயகத்தின் மீதான பற்று, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றுக்கு நடராஜா ரவிராஜ்ஆற்றிய சேவைகளை கருத்தில் கொண்டு அவருக்கு மாமனிதர் விருதை அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

சத்தியமான வாழ்க்கை வாழ்ந்த யாரையும், மரணம் ஒருபோதும் அழிக்க முடியாது. அவர்களின் ஆத்மாவுக்குஅழிவே கிடையாது. தாயகத்தின் ஆன்மாவில் சரித்திரப் புருஷர்களாக அவர்கள் எப்போதும் வாழ்வார்கள் என்றுகூறியுள்ளார் பிரபாகரன்.

மட்டக்களப்பிலிருந்து வெளியேறும் தமிழர்கள்:

இந் நிலையில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் தொடர் தாக்குதல் காரணமாகமட்டக்களப்பிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குவெளியேறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பு மாவட்டம் கதிரவேலி என்ற இடத்தில்அகதிகளாக தங்கியிருந்த தமிழர்கள் முகாம் மீது இலங்கை ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 65 அப்பாவித் தமிழர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர்கள்ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதுவரை 41,000தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து குடும்பம் குடும்பமாக தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.

அன்னான் கோரிக்கை:

இதற்கிடையே, இலங்கையில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான் கவலை தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் அன்னான் வெளியிட்டுள்ளஅறிக்கையில், அப்பாவி உயிர்கள் பலியாகும் சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும்என இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு தரப்பினரும் போரை நிறுத்தி விட்டு மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைதொடர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

ரவிராஜ்-ஸ்காட்லாந்து யார்ட் விசாரிக்கும்

இந் நிலையில் கொழும்பில் யாழ்ப்பாணம் எம்.பி. ரவிராஜ் நடராஜா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஸ்காட்லாந்து யார்டுபோலீஸாரின் ஒத்துழைப்பை இலங்கை அரசு கோரியுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ரவிராஜ் கொலை சம்பவத்திற்கு அதிபர் ராஜபக்ஷே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையை யார் நிகழ்த்தியது என்பதைக் கண்டுபிடிக்கஸ்காட்லாந்து யார்டு போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறைக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணையில் ஸ்காட்லாந்து யார்டின் உதவியை பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த கோழைத்தனமான,கொடிய செயலைச் செய்தவர்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் அதிபர் உறுதியாக உள்ளார்.

விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறும் காவல்துறை தலைவருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கண்டனம்:

ரவிராஜ் படுகொலைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நடராஜ் படுகொலை போன்ற குற்றச் செயல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும். குற்றம் இழைத்தவர்களை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி தண்டனைபெற்றுத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+