வாஸ்துவால் காலியான ஆந்திர கிராமம்
அனந்தபூர்:வாஸ்து பயம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமமே காலியாகி விட்டது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கொண்டிப்பள்ளி கிராமம்தான் அந்தப்பரிதாபத்துக்குரிய கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே கிழக்குப் பகுதியில் ஒரு மலைஉள்ளது. இந்த மலையின் நிழல் கிராமத்தில் உள்ள வீடுகள் மீது விழுகிறது.இது வாஸ்துப்படி சரியில்லை, அதனால்தான் கிராமத்தில் நல்லது எதுவும்நடப்பதில்லை என்று யாரோ சிலர் பீதியைக் கிளப்பி விட்டனர்.
இதைக் கேட்டு பயந்து போன கிராம மக்கள் தங்களது வீடுகளைக் காலி செய்து விட்டுவேறு இடத்திற்கு இடம் பெயர முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டதாலுகா தாசில்தாரைப் பார்த்து தாங்கள் வீடுகளைக் காலி செய்யப் போவதாகவும்வேறு இடத்தில் தங்களுக்கு இடம் தருமாறும் கோரினர்.
இந்த நூதன கோரிக்கையைக் கேட்ட தாசில்தார், அப்படியெல்லாம் தர சட்டத்தில்இடம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் இதை பொருட்படுத்தாத அந்தக்கிராமத்தைச் சேர்ந்த 150 பேரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வேறுபகுதிகளுக்கு சென்று கொண்டுள்ளனர்.
வாஸ்து ஏற்படுத்திய இந்த பீதி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications