ரேஷன் கார்டு இருந்தால் டிவி ஃப்ரீ: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

மதுரை:குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் காரணமாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இலவச டிவி வழங்கும் திட்டம்அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மதுரை அருகே சக்கிமங்கலம் பகுதியில் உள்ளசமத்துவபுரத்தில் இலவச டிவி வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 100 குடும்பங்களுக்கு இலவச டிவி பெட்டிகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவர் உதயசந்திரன், மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமுக்கம் மைதானத்தில் நடந்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தைத்தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியில் நாட்டுக்காக பல முறை திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதைப் போல இப்போது வீட்டுக்கும்பல திட்டங்களை கலைஞர் அரசு கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இலவச டிவி வழங்கும் திட்டம்.

டிவி வைத்திருக்கும் பலர் தங்களுக்கு அரசின் கலர் டிவி கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து தங்களதுடிவிகளை வெளியில் கொண்டு சென்று ஒளித்து வைத்திருப்பதாக சொன்னார்கள். அதற்கு அவசியம் இல்லை.குடும்ப அட்டை யார் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கெல்லாம் டிவி வழங்க கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் உணர்வை புரிந்து கொண்டு இந்த உத்தரவை கலைஞர் பிறப்பித்துள்ளார். பொங்கல் பண்டிகை முதல்இலவச காஸ் அடுப்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.இளைஞர்களே நம்பிக்கையுடன் இருங்கள், பிரகாசமான வாழ்வு உங்களுக்கு வர வேண்டும் என்றார் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+