கோவை விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்
கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த தொலைபேசி மிரட்டலால் அங்கு பாதுகாப்பு மேலும்அதிகரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு நேற்று முதல் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு நேரடிவிமானங்களை இயக்கும் டெல்லி, மும்பை, சென்னை ஆகிய விமான நிலையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற விமான நிலையங்களிலும் வழக்கமான பாதுகாப்புடன் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில்இன்று காலை கோவை விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசியில் பேசிய ஒரு நபர், விமான நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக மிரட்டினார்.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. கோவை நகரின் முக்கியப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பெரியகுளம் பள்ளிக்கு குண்டு மிரட்டல்:
இதற்கிடையில் தேனி மாவட்டம் பெரியகுளம் கச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பெரிகுளம் தென்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பள்ளி முழுவதும்சோதனை நடத்தினார். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளி மாணவ, மாணவிகளிடைய பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications