தலித் பஞ். தலைவர்களுக்கு இன்று பாராட்டு விழா
சென்னை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களின்தலைவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் நீண்டகாலமாக தலைவர் தேர்வு செய்யப்பட இயலாத சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்தஉள்ளாட்சித் தேர்தலின்போது இந்த நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலலை சுமூகமாக நடத்த உதவிய ஊர் மக்களையும், தலித் பஞ்சாயத்துத்தலைவர்களை கெளரவிக்கும் வகையிலும் சென்னையில் இன்று பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு தமிழக அரசு சமத்துவ பெருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாஇன்று மாலை கலைவானர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நான்கு தலித் பஞ்சாயத்துத் தலைவர்களும், அவர்களின் குடும்பத்தினர்மற்றும் நான்கு ஊர் பொது மக்கள் சுமார் 300 பேர் நாகர்கோவில் சிறப்பு ரயிலில் இன்று அதிகாலை 4.25மணிக்கு சென்னை வந்தனர். அவர்களுடன் மதுரை மாவட்ட கலெக்டரும், விருதுநகர் மாவட்ட கலெக்டரும்மற்றும் அதிகாரிகளும் உடன் வந்தனர்.
ரயில் நிலையத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு பேண்டு வாத்தியங்கள் முழுங்கஉற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்குக்கு சால்வை அணிவித்துவரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பரிதி இளம்வழுதி, சாத்தூர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர்தொல்.திருமாளவன், மோகன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுடம் கூறியதாவது,
பல ஆண்டுகளுக்கு பின் தேர்தலில் வெற்றி பெற்று பணிகளை தொடங்கி இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி,நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களின் தலைவர்களுக்கும் இன்றுமாலை முதல்வர் தலைமையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்த 4 பஞ்சாயத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்ய முறையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அனைத்து கட்சி ஒத்துழைப்புடன், அனைத்து உள்ளாட்சிதலைவர்களையும் அழைத்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications