மீண்டும் நடந்த தலைவர் தேர்தல்: திமுக வெற்றி
சென்னை:நிறுத்தி வைக்கப்பட்ட 90 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்றுநடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுகவே வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்குதேர்தல் நடந்தது. இதில் 21 ஊராட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் 69 ஊராட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் தேர்தல் பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. கவுன்சிலர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில் பெரும்பாலானஇடங்களில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். கடந்தமுறை நடந்த தேர்தலில் அதிமுக தான் இந்தத் தலைவர் பதவியை பிடித்தது. அதைத் தொடர்ந்து திமுகவைச்சேர்ந்த எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளே புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல்ஒத்திவைக்கப்பட்டது. இந் நிலையில் இன்று நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
மேச்சேரி நகராட்சித் தலைவர் பதவியை சுயேச்சை வேட்பாளர் வென்றார். மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவர்பதவியை காங்கிரஸ் கட்சியின் ரஜினி கைப்பற்றினார்.
முத்துப்பேட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வந்த தேர்தல் அதிகாரி சுந்தரத்திற்கு திடீர்நிெஞ்சு வலி ஏற்பட்டதால் தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல காஞ்சிபுரம்ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளாததால் தேர்தல்ஒத்திவைக்கப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications