பிரதமர் வீட்டை நோக்கி பறந்த குவைத் விமானம்
டெல்லி:டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடு உள்ள பகுதியை நோக்கி குவைத் ஏர்வேஸ் நிறுவன விமானம்பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களைக் கடத்தி நடு வானில்தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எப்பிஐ எச்சரித்துள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமானங்கள், விமான நிலையங்கள், பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில், இன்று டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் செல்லும் குவைத்ஏர்வேஸ் விமானம் கிளம்பியது. வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் திடீரென அது திசை மாறிச் செல்லத்தொடங்கியது.
டெல்லியில் விவிஐபிக்கள் வசிக்கும் பகுதிகளின் மேல் விமானங்கள் பறக்க சில பகுதிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லம் உள்ள பகுதியும் அதில் ஒன்று. இந்தப் பகுதியை நிாேக்கி குவைத்விமானம் பறக்க ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் உடனடியாகவிமானியை தொடர்பு கொண்டு வேறு பாதையில் விமானத்தைத் திருப்பினர். இது தெரியாமல் நடந்த தவறுஎன்பது பின்னர் தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications