வெறி பிடித்த குதிரை அடித்துக் கொலை
சேலம்:சேலம் மாவட்டம் எடப்பாடியில் சாலையில் சென்றவர்களை தாறுமாறாக கடித்துக் குதறிய வெறி பிடித்த கோவில்குதிரையை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
எடப்பாடி மாரியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் விழாக்களின்போதுபொருட்களைத் தூக்கிச் செல்ல குதிரைகளை பயன்படுத்தி வந்தனர். இந்தக் குதிரைகளுக்கு விழாக்களின்போதுதான் வேலை. மற்ற நேரங்களில் இவற்றை கட்டிப் போடாமல் சுதந்திரமாக அவிழ்த்து விட்டு விடுவார்கள்.
அப்படி சுற்றித் திரிந்த ஒரு குதிரைக்கு வெறி பிடித்துள்ளது. வெறி நாய் கடித்து குதிரைக்கு வெறி பிடித்ததாககூறப்படுகிறது. வெறி பிடித்த அந்தக் குதிரை பஸ் நிலையப் பகுதியில் தாறுமாறாக ஓடியது.
எதிரில் வந்தவர்களையெல்லாம் சரமாரியாக கடிக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்டோர்குதிரையிடம் கடி வாங்கினர். இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள், ஒன்று கூடி கட்டைகள், கல்உள்ளிட்டவற்றால் குதிரையை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர்.
அடி தாங்க முடியாத குதிரை மயங்கி விழுந்து இறந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல்பறந்தது. அவர்கள் விரைந்து வந்து குதிரையின் பிணத்தை மீட்டு கொண்டு சென்று புதைத்தனர்.
வெறிக் குதிரையால் கடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications