காளிமுத்துவை சாகடித்தவர் கருணாநிதி: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் கடைசிக் காலத்தில் அவர் மீது பொய்யான வழக்குகளைப்போட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை சாகடித்தவர் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:தொன்மையும், உண்மையும் வாய்ந்த திருக்குறளை அரசுப் பேருந்துகளிலிருந்து அழித்து விட்டு, கருணாநிதியின்பேச்சுக்களை பொன்மொழி என்ற பெயரில் எழுதியிருப்பது வரலாற்றுப் பிழை. இது தமிழர்களையும், தமிழ்ச்சமுதாயத்தையும் சிறுமைப்படுத்தும் செயல் என நான் கண்டித்திருந்தேன்.

இதற்கு நேரடியாக பதில் தராமல், தானே உயர்ந்தவர் என்பது போல கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார்.மக்களை திசை திருப்பும் வகையில் அவரது அறிக்கையில் அவதூறுகளை அவிழ்த்து விட்டுள்ளார்.

மறைந்த சபாநாயகர் காளிமுத்து சட்டசபையில் அன்றாடம் சொல்லும் திருக்குறளின் பொருளுரை தான் எழுதியஉரைதான் என்றும், அதுகுறித்து எனக்குத் தெரிய வந்தபோது நான் காளிமுத்துவை மிரட்டியதாகவும்கூறியுள்ளார்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில், அண்ணா என் கனவில் தோன்றினார் என்று பலமுறை கூறியவர்தான்கருணாநிதி. இப்போது அவரது கனவில் காளிமுத்து வந்துள்ளார் போலும்.

காளிமுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, அவரது சிகிச்சை செலவுகள் முழுவதையும் நான் ஏற்றேன்.அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். இதனால் நெகிழ்ந்து போன காளிமுத்து, என் உயிரைக்காப்பாற்றிய தாய் என்று என்னைப் பற்றி கண்ணீர் மல்க பேசியவர். இதை நாடறியும்.

ஆனால் காளிமுத்துவின் கடைசி நாட்களில் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சொல்லி, வழக்குப்போட்டு, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி சாகடித்த கருணாநிதிக்கு, நான் காளிமுத்துவை மிரட்டியதாகசொல்ல எந்த அருகதையும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+