மனித நேயப் பண்பு இல்லாத அதிமுக: கருணாநிதி
சென்னை:மறைந்தவர்களின் குறையைத் தவிர்த்து நிறையைப் போற்றுவது மனித நேயப் பண்பு. அந்தப் பண்பை அதிமுகநண்பர்களிடத்திலே எதிர்பார்க்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
வற்றாத கற்பனையும், வளமான தமிழ்ப் புலமையும் கொண்ட தம்பி காளிமுத்து மறைந்து விட்டார். நமக்கு எதிர்வரிசைக்குச் சென்றார், இயற்கை எய்தினார் என்பதற்காக; மனித நேயம மறந்தோமில்லை. மறுகணமே இரங்கற்செய்தியை வெளியிட்டோம்.
அரசியல் கட்சிகளிடையே இந்தப் பண்பாடு நிலைத்திட வேண்டும் என்றுதான் நடுநிலையாளர்கள், நல்லோர்அனைவருமே தமிழகத்தில் விரும்புகின்றனர். நிலைத்திருக்கிறது நம்மிடையே அந்தப் பண்பாடு என்பதினால்தான் நினைத்திருக்கிறோம் இன்னம். அவர்களுக்கும் நமக்கும் இடையே இருந்த நட்புணர்வை, தோழமையை.
என்னிடம் என் எழுத்து மீதும் காளிமுத்து அளவிட முடியாத காதல் கொண்டிருந்தார் என்பேன். 2001ல்ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார். அப்போது சபாநாயகர் பொறுப்பு தம்பி காளிமுத்துவுக்கு தரப்படுகிறது.
சட்டசபை கூடும்போது ஒவ்வொரு நாளும் சபாநாயகர் திருக்குறளைப் படித்து அவையில் அதற்குப் பொருளும்கூறுவார். என்னைப் பொறுத்தவரையில் நான் அப்போது பேரவைக்குச் செல்வதில்லை. இருந்தாலும் ஒரு ஆசை.ஒவ்வொரு நாளும் அவைத் தலைவர் காளிமுத்து எந்தக் குறள் உரையைப் படிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
அவைத் தலைவராக காளிமுத்து வீற்றிருந்த அந்த ஐந்தாண்டுகளில் மிகப் பெரும்பகுதியான நாட்களில் அவர்என் குறள் உரையைத்தான் படித்துப் பொருள் விளக்கம் தந்திருக்கிறார். இது எப்படியோ ஜெயலலிதாவுக்குத்தெரிந்து, காளிமுத்துவை அழைத்து மிரட்டிய பிறகு ஜெயலலிதா ஆட்சி முடிவடைதற்கு சில மாதங்களுக்குமுன்பு வரையில், அதாவது 2005ம் ஆண்டு வரையில காளிமுத்து, கலைஞர் உரையாம் என்னுரையைபயன்படுத்துவதை சில மாதங்கள் மட்டும் நிறுத்திக் கொண்டார்.
இதனால்தான் என் தமிழ் மீதும், இலக்கிய ஆய்வின் மீதும் காளிமுத்து காதல் கொண்டிருந்தார் என்றுஅப்போதும் கூறினேன், இப்போதும் கூறுகிறேன். மறைந்தவர்களின் குறைகளைத் தவிர்த்து நிறைகளைபோற்றுவதே மனித நேயப் பண்பு.
அந்தப் பண்பினை பண்பாளர் பழனிவேல்ராஜன் மறைந்தபோதும், கண்மணி முரசொலி மாறன் மறைந்தபோதும்ஒரு வரி அனுதாபச் செய்தி கூட வெளியிட மறந்த அதிமுக நண்பர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.
நாம் கட்டிக் காக்கும் அந்தப் பண்பை உணர்த்திட, திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வேறுபாட்டைவெளிப்படுத்த தம்பி காளிமுத்துவின் மூச்சல்லவோ அடங்கியிருக்கிறது. அந்தோ! அந்தத் தமிழ் மூச்சு நின்றுவிட்டதே!
மானசீகமாக என்னை அண்ணனாக ஏற்று மறைமுக அன்பு செலுத்திய அந்த மரகத மணிச் சுடர் மண்ணில்புதைந்து போனதே என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications