யாழ் சாலையை திறக்க ராஜபக்ஷே புது கண்டிஷன்
கொழும்பு:யாழ்ப்பாணத்தையும், இலங்கையின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கியநெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வரி வசூலிக்க மாட்டோம் எனவிடுதலைப் புலிகள் உறுதியளித்தால் யாழ் சாலையை திறக்க இலங்கை அரசுபரிசீலிக்கும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே புதிய நிபந்தனை விதித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கிய சாலையாகஏ-9 நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால்கடந்த 6 மாதங்களாக சாலை மார்க்கமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசிக்கும் மக்களால் அங்கிருந்து வெளியேறமுடியாத நலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளதால்அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.இலங்கை அரசு யாழ் சாலையை திறக்க வேண்டும் என விடுதலைப் புலிகள்வற்புறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே ஜெனீவாபேச்சுவார்த்தையிலும் அவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அக்கோரிக்கையைஇலங்கை அரசு நிராகரித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
விடுதலைப் புலிகள் தவிர நார்வே குழு மற்றும் பல்வேறு தரப்பினரும் யாழ்சாலையைத் திறக்க வேண்டும் என வற்புறுத்தியதால், இலங்கை அரசு சற்றுப் பணிந்துவந்தது. யாழ் சாலையை திறக்க வேண்டுமானால், விடுதலைப் புலிகள், ராணுவத்தினர்மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என அதிபர் ராஜபக்ஷே நிபந்தனை விதித்தார்.
தற்போது இன்னொரு புதிய நிபந்தனையை அவர் விதித்துள்ளார். அதாவதுயாழ்ப்பாணம் சாலையில், செல்லும் வாகனங்களிடம் விடுதலைப் புலிகள் வரி வசூல்செய்யக் கூடாது. அப்படி நடப்பதாக உறுதியளித்தால் சாலையைத் திறந்து விடுவதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஜெனீவா பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் ஏ-9 சாலையைதிறப்பது குறித்த அஜென்டாவே இடம்பெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையில்நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த எந்த விவகாரமும் ஆலோசனைக்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நான் யாழ் சாலையைத் திறக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் அல்ல. அந்தசாலை வழியாக செல்லும் வாகனங்களிடம் விடுதலைப் புலிகள் வரி வசூல்செய்கிறார்கள். இதை செய்ய மாட்டோம் என அவர்கள் உறுதி அளித்தால் சாலையைத்திறக்க நடவடிக்கை எடுப்பேன்.
எங்களது சொந்த மக்களுடன் சண்டையிடுவது எனக்கு ஏற்புடையது அல்ல.இப்போதுள்ள பிரச்சினையை ராணுவ ரீதியாக தீர்க்க முடியாது. அனைத்துத்தரப்பினரின் உணர்வுகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வுதான் உகந்த வழி.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக அனைத்துத் தமிழ் அமைப்புகளுடனும் பேச நாங்கள்தயாராகவே இருக்கிறோம். கருணா பிரிவுக்கு நாங்கள் ஆதரவு தருவதாக கூறுவதில்உண்மை இல்லை. யார் அந்த கருணா? கருணாவைப் பற்றி நான் பத்திரிகைகளில்தான்படித்துள்ளேன். அவர் பிரபாகரனின் திறமையான தளபதியாக இருந்தார் என்பதுமட்டும் தெரியும்.
எங்களைப் பொருத்தவரை எந்தப் போட்டிக் குழுவையும் ஆதரிப்பது எங்களதுநோக்கம் அல்ல. அது எங்களது வேலையும் அல்ல.
எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் ஆயுதம்தேவைப்படுவதால் சர்வதேச நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறோம்.பல்வேறு நாடுகளிடமிருந்து ஆண்டு முழுவதும் ஆயுதங்கள் வாங்கி வருகிறோம்.ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிடம் (பாகிஸ்தான்) மட்டும் ஆயுதம்வாங்குவதில்லை. ஆயுதம் வாங்குவதில் இதுதான் எங்களது கொள்கை என்றுகூறியுள்ளார் ராஜபக்ஷே.
கொழும்பில் இன்று முழு அடைப்பு:
இதற்கிடையே இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பி ரவிராஜாவின் படுகொலையை எதிர்த்து கொழும்பில் இன்று முழு அடைப்பு நடைபெற்றுவருகிறது.
பொரளை பகுதியில் ரேமண்டஸ் மலர் சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவிராஜாவின் உடல் இன்று பிற்பகல் கொழும்பு நகரசபை மண்டபத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குபொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை ரவிராஜ் உடல் யாழ்ப்பாணம் சாவகச்செரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்,தொழிற்சங்க தலைவர்கள் ரவிராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ரவிராஜ் படுகொலையை கண்டித்து கொழும்பு நகரில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் வெள்ளை கொடி பறக்க விடப்பட்டு இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications