தமிழகத்தில் மழை தொடரும்-நிரம்பியது பெரியாறு
சென்னை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் எனவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கன மழை தொடர்ந்து வருகிறது. நேற்று பாம்பனில் அதிக அளவாக 8செ.மீட்டரும், வேதாரண்யத்தில் 5 செ.மீட்டரும், ஒட்டப்பிடாரத்தில் 4 செ.மீட்டரும்,சிதம்பரம், ராமநாதபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 3செ.மீட்டரும் மழை பெய்தது.
இந் நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் 48 மணி நேரத்திற்குஇடியுடன் கூடிய கன மழை பெய்யலாம்
என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நிரம்பியது பெரியாறு: வெள்ள எச்சரிக்கை
இந் நிலையில் குமுளி-தேக்கடியில் உள்ள அணையான முல்லைப் பெரியாறு அணை135 அடியைத் தொட்டு விட்டதால், பெரியாறு பாசனப் பகுதியில் வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையில்முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது 136 அடி வரை நீர்தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதை 142 அடியாக உயர்த்த தமிழக அரசும்,முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளும் நீண்ட காலமாக கோரிவருகின்றனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை மதிக்க மறுத்து விட்டதுகேரள அரசு. இந் நிலையில் தற்போது பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவந்தது.
தற்போது 135 அடியை அணையின் நீர் மட்டம் தொட்டு விட்டது. இதையடுத்துவெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரியாறு கரையோரம் உள்ள மக்கள்பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லமாறு இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர்அறிவித்துள்ளார்.
மேலும் அணையின் நிலையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.உபரி நீரைத் திறந்து விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 136 அடியைநீர்மட்டம் தொட்டதும் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications