வருகிறது போலீஸ் சட்டத்தில் அதிரடி மாற்றம்
சென்னை:நாடு முழுவதும் காவல்துறை சட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித் தனி போலீஸ் சட்டம் அமலில்உள்ளது. இந்த சட்டம் மிகவும் அறுதப் பழசானது. அதாவது 1861ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது இந்த சட்டம். இச்சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளதால் மொத்தமாகஇவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைஎழுப்பப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து போலீஸ் சட்டத்தில் மாறுதல் கொண்டு வர மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. போலீஸ் சட்டத்தில் என்னென்ன மாறுதல்களை மேற்கொள்ளலாம்என்பதை ஆராய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம்வருகிற 22ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அனைத்து மாநில டிஜிபிக்களும் பங்கேற்கிறார்கள். போலீஸ்சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள மாறுதல்கள் குறித்து டிஜிபிக்களின் கருத்துஅறியப்படவுள்ளது. அதன் பின்னர் இக்குழு போலீஸ் சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய மாறுதல்கள் குறித்து மத்திய அரசிடம் பரிந்துரைக்கும்.
அதன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு போலீஸ் சட்டத்தில் செய்யப்படவேண்டிய மாறுதல்களை மத்திய அரசு பரிந்துரைக்கும். புதிய மாறுதல்களின்படிகாவல்துறை தலைவருக்கு அதாவது டிஜிபிக்கு (சில மாநிலங்களில் ஐஜி) அதிகஅதிகாரங்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும், டிஜிபி மற்றும் ஐஜிக்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள்.நியமனத்திற்குப் பிறகு 2 ஆண்டுகள் வரை அவர்களை இடமாற்றம் செய்ய முடியாதுஎன்பது முக்கியமான ஒரு மாற்றம். மேலும், அரசியல் குறுக்கீடுகள்,ஆட்சியாளர்களின் குறுக்கீடுகள் இல்லாமல் டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் செயல்படும்வகையிலும் மாற்றங்கள் அமையவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications