தனியார் நிறுவன இடஒதுக்கீடு-நாளை அறிக்கை
டெல்லி:தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதிமுறைகளை வகுக்க மத்திய அமைச்சர்கள் குழு உருவாக்கியுள்ள அறிக்கைநாளை வெளியாகவுள்ளது.
தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இதுதொடர்பான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க அமைச்சர்கள் சரத்பவார்மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தலைமையில் இரு வேறு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தலைமையிலான இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இரும்பு-எஃகுத் துறை அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வான், பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் கொண்டையா, சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் மற்றும் சமுக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தனியார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து யோசனைகளை இக்குழு மத்திய அரசுக்குப்பரிந்துரைக்கவுள்ளது.
பிரணாப் முகர்ஜி தலைமையிலான இன்னொரு குழு, தலித் சமுதாயத்தினரின் பொருளாதார, சமூக அதிகாரப்பகிர்வுக்கான வழிமுறைகள் குறித்து அரசுக்குப பரிந்துரைக்கவுள்ளது.
இதற்கிடையே தனியார் நிறுவன அதிபர்களுடன் மத்திய அமைச்சர் மீரா குமார், பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டாடா நிறுவனங்களின்தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்ட முன்னணி அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இட ஒதுக்கீடு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் சட்டப்பூர்வாக அதை அமல்படுத்தத்தயாரில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் அமைச்சர்கள் குழுக்களிடம் தெரிவித்துள்ளன.
தற்போதே, தாங்களாகவே விரும்பி இட ஒதுக்கீட்டை வழங்கி வருவதாகவும் அப்படியே தொடர விருப்பம்தெரிவித்தும் அவை அமைச்சர் குழுக்களிடம் கருத்து தெரிவித்துள்ளன.
இரு அமைச்சர் குழுக்களும் தங்களது பரிந்துரைகளை நாளை இறுதி செய்யவுள்ளன. இதையடுத்து அரசிடம் அறிக்கை கொடுக்கப்படும். நாளை மறுதினம் இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கானநடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று தெரிகிறது.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: மொய்லி
இந் நிலையில் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இடஒதுக்கீட்டுக்கான உயர் மட்டக் கமிட்டியின் தலைவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்என்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் சட்ட முன் வரைவு 296-பிரிவின் கீழ் சிறுபான்மையினருக்குஇடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்திய பிரிவினைக்கு பின்னர் இதில் தீவிரம்காட்டப்படவில்லை.
அரசியல் சட்டத்தில் இதற்கான விதிகள் எதுவும் இல்லை என்றாலும் பிற்பட்டோருடன் சேர்த்துமுஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கலாம். பிற்பட்டோருக்கு அவர்களுடைய மதத்தை அடிப்படையாககொண்டு இடஒதுக்கீடு அளிக்கவில்லை. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி உள்ளதால்தான் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரில் சிலர் பிற்பட்ட சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கியுள்ளனர். சமூகரீதியாகவும்பொருளாதார ரீதியாகவும் பிற்பட்டோர் என்ற தகுதியை முஸ்லிம்கள் கொண்டிருந்தால் அவர்களுக்குபிற்பட்டோருடன் சேர்த்து நிச்சயம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 11 சதவீத முஸ்லிம்களில் நான்கு சதவீதம் பேர் இட ஓதுக்கீடு சலுகைபெற்றுள்ளனர். எனவே இதை பின்பற்றி மத்திய அரசிலும் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்றார் மொய்லி.
முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும்,பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இட ஒதுக்கீட்டுக்கான உயர் மட்டக் கமிட்டியின்தலைவரான வீரப்ப மொய்லின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications