ஆசிய ஹீரோக்கள் பட்டியலில் நாராயண மூர்த்தி
டெல்லி:புகழ் பெற்ற டைம் இதழின் ஆசிய நாயகர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, சச்சின் டெண்டுல்கர், நாராயணமூர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த அறுபது ஆண்டுகளில் வரலாற்றில் இடம் பிடித்த ஆசியர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தேசத் தந்தைமகாத்மா காந்தி, நவீன இந்தியாவின் சிற்பி நேரு, ஏழைகளுக்காக வாழ்ந்த அன்னை தெரசா, தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை எனபோற்றப்படும் நாராயண மூர்த்தி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டைம் இதழின் இந்த சிறப்பிதழ் நாளை விற்பனைக்கு வருகிறது. காந்தி, நேரு போன்ற இரு பெரும் தலைவர்களைப் பெற்ற பெருமை வெகு சிலநாடுகளுக்கே உள்ளது என்று மறைந்த இரு தலைவர்களுக்கும் டைம் புகழாரம் சூட்டியுள்ளது.
சத்தியாகிரகம், அகிம்சை ஆகியவற்றால் எதையும் வெல்ல முடியும் என்பதை முதல் முறையாக உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் மகாத்மா காந்தி.உலகின் மிகச் சிறந்த அசாதாரணமான தலைவராகவும் காந்தி திகழ்ந்தார் என டைம் இதழ் கூறியுள்ளது.
தொழில்துறையில் ஆசியாவுக்கு புதிய பெருமை சேர்த்துக் கொடுத்தவர்கள் என நாராயணமூர்த்தியையும், லட்சுமி மிட்டலையும் டைம்கூறியுள்ளது. இந்தியாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் நாராயணமூர்த்தி என டைம் புகழாரம் சூட்டியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினாரால் ஆளப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்த மிட்டல், மேற்கத்திய நாடுகளை வென்று (ஆர்சலர்நிறுவனத்தை வாங்கியது) இந்தியர்களுக்கு புதிய கெளவரத்தை தேடிக் கொடுத்துள்ளார் என்று மிட்டலுக்கு புகழாரம் சூட்டியுள்ளது டைம்.
இந்திய விளையாட்டுத் துறைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடிக் கொடுத்தவர், பெருமை சேர்த்தவர் என சச்சினுக்கு புகழாரம்சூட்டப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர நோபல் பரிசு வென்ற அமார்த்யா சென், சல்மான் ருஷ்டி ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானின் தேசத் தந்தை முகம்மது அலி ஜின்னா, பர்மா ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்டோரும் ஆசிய ஹீரோக்கள் வரிசையில்இடம்பெற்றுள்ள பிற தலைவர்கள் ஆவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications