அதிமுகவுடன் நேசமான உறவு- வைகோ
நாகர்கோவில்:மதிமுகவை அழிக்க முதல்வர் கருணாநிதி நினைக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதிமுக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் கட்டு கோப்பாக இயங்கி வருகிறது. அதிமுகவுடனானநேச உறவும், தோழமையும் மேலும் வலுப்பேறும் விதத்தில் எங்கள் கூட்டணி இயங்கி கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் திமுக திட்டமிட்டு ஜனநாயக படுகொலையை நடத்திமுடித்துள்ளது. சென்னை மாநகர வரலாற்றில் இப்படியொரு அராஜகமும், வன்முறையும் நடந்ததில்லை. இதற்குகாரணம் கடந்த சட்டசபை தேர்தலில் எழு தொகுதிகளை திமுக இழந்து தான்.
மாநில தேர்தல் ஆணையர் ஆளும் கட்சிக்கு எடுபிடியாக செயல்பட்டார். இதை சுட்டிக்காட்டினால் முதல்வர்விஷமம் நிறைந்த மோசமான பதிலை முன் வைக்கிறார்.
ஆளும் கட்சியினர் வன்முறை, பணத்தை பயன்படுத்தி தலைவர் பதவிகளை கைப்பற்றிய மோசடி தேர்தல் தான்நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல். முதல்வர் இதனை முதலில் செய்துவிட்டு மக்கள் ஏதும் அறியாதவர்கள் என்றநினைப்பில், தற்போது மறைமுக தேர்தல் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கிறார்.
மதிமுகவை அழிக்கும் நோக்கிலேயே கருணாநிதி செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஆனால் அது நடக்காது.தியாகத்தால் கட்டப்பட்ட இலட்சிய கோட்டை மதிமுக. நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும்,மதிமுகவை மட்டும் அவர்கள் குறிவைத்து தாக்குவது எங்கள் கட்சி மீது அவர்களுக்கு இருக்கும் பயம் தெரிகிறது.
வரும் 16ம் தேதி சென்னையில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. 17ம் தேதி சென்னையில்உள்ள இலங்கை தூதரக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் நடக்க இருக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications