அமெரிக்க மரபியல் நெல்-பாஜக கடும் எதிர்ப்பு
சென்னை:தமிழ்நாட்டில் அமெரிக்க மரபியல் நெல்லை பயிரிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என பாஜகட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
கோவை அருகே மத்திய அரசு சார்பில் விவசாய கழகம் அமெரிக்க மரபியல் விதைகளை பயிரிட்டு உள்னனர்.இதற்கு நாங்கள் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்தோம். காரணம் அந்த விதைகள் பயிரிட்டு நெல் விளைந்தபிறகு கிடைக்கும் நெல் மணியை மீண்டும் பயிரிட முடியாது. விவசாயிகள் மீண்டும் புதிதாக விதை நெல்லைஅமெரிக்க நிறுவனத்திடம் தான் வாங்க வேண்டும்.
இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பையும், விதை உற்பத்தி கம்பெனிகளுக்கு ஏகப்பட்ட வருமானத்துக்கும்வளி வகுபக்கும். எனவே அந்த பயிர்களை விவசாயச சங்கத்தின் தலைவர் செல்லமுத்து தலைமையில் பலர்தீயிட்டு கொளுத்தினர். இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மீண்டும் இதுபோல விதைகளை தமிழ்நாட்டில் பயிரிட்டு சோதனை நடத்தினால் பாஜக தொண்டர்கள்முன்னதாகவே போலீசுக்கு தெரிவித்து விட்டு பயிர்களை தீயிட்டு கொளுத்துவார்கள். அதற்காக என்தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications