சதி தான் கால் முளைத்து சாதியானது-கருணாநிதி
சென்னை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கட்சியேந்தல் ஆகிய 4 தலித்பஞ்சாயத்துகளுக்கும் இந்த ஆண்டே ரூ. 20 லட்சம் ஒதுக்கப்படும் என முதல்வர்கருணாநிதி கூறினார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர்மாவட்டம் கொட்டக்கட்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துகளுக்கும் நீண்டகாலத்துக்குப் பின் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டு தலித் தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்ட கலெக்டர்கள் பிற ஜாதியினருடன் சமரசம் பேசியதன் விளைவாகதேர்தல் சாத்தியமானது.
நீண்ட காலத்துக்குப் பின் தலித் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டதையடுத்துஅவர்களுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
சமத்துவ பெருவிழா என்ற பெயரில் சென்னையில் தமிழக அரசு நடத்திய இந்தவிழாவில் பாப்பாபட்டி ஊராட்சி தலைவர் பெரியகருப்பன், துணைத் தலைவர்தேவராஜ், கீரிப்பட்டி தலைவர் பாலுச்சாமி, துணைத் தலைவர் பழனிச்சாமி,
நாட்டார்மங்கலம் தலைவர் கணேசன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம்,
கொட்டக்கட்சியேந்தல் தலைவர் கருப்பன், துணைத் தலைவர் முனியான்டிஆகியோருக்கு கருணாநிதி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளைவழங்கினார்.
இந்த பஞ்சாயத்துகளில் ஜாதி மோதல்களை தவிர்த்து தேர்தலை வெற்றிகரமாகநடத்திய மதுரை மாவட்ட கலெக்டர் உதய சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர்எஸ்.எஸ். ஜவகர் ஆகியோருக்கும் முதல்வர் பாராட்டு பத்திரம் வழங்கி பாராட்டினார்.
விழாவில் கருணாநிதி பேசுகையில்,
சாதி என்ற சொல் தமிழ் அகராதியில் இல்லை. தமிழனிடம் என்றைக்கும் சாதிஇல்லை. தமிழில் இருந்தது சதி என்ற சொல் தான். அதற்கு கால் முளைத்து சாதியாகிவிட்டது. அந்த சாதி ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளவும், வீழ்த்தவும், ஆதிக்கம்செலுத்தவும் பயன்பட்டது.
பாப்பாபட்டி உட்பட நான்கு ஊராட்சிகளும் கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயகபட்டினி கிடந்தன. தற்போது அது போக்கப்பட்டு ஜனநாயக உணவைஉட்கொண்டுள்ளன.
இந்த புதிய வரவுகளான நான்கு ஊராட்சித் தலைவர்களும் உற்சாகமாக பணியாற்றஅந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 20 லட்சம் வீதம் ரூ. 80 லட்சம் இந்த ஆண்டேஒதுக்கப்படும்.
இந்த ஊராட்சிகளில் வெற்றிகரமாக தேர்தல் நடந்த மகிழ்ச்சியை திமுகவும் பகிர்ந்துகொள்ளும் வகையில் கட்சியின் சார்பில் தனியாக ரூ. 20 லட்சமும் வழங்கப்படும்.
திமுக சார்பில் வழங்கப்படும் இந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ. 5 லட்சம் வீதம்பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,
உள்ளாட்சி அமைப்புகளில் திமுக, கூட்டணி பெற்ற மிகப் பெரிய வெற்றியை விடஇந்த நான்கு ஊராட்சிகளில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது தான் பெரிய வெற்றி.
உள்ளாட்சி அமைப்புகளில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பதவிகள் காலியாகஇருக்க முடியாது. ஆனால், இந்த நான்கு பஞ்சாயத்துகளுக்கு மட்டும் 10 முறைதேர்தல் அறிவிக்கப்பட்டும், வெற்றிகரமாக நடத்தி முடிக்க இயலவில்லை. இப்போதுதான் இது சாத்தியமாகியுள்ளது என்றார்.
இந்த பஞ்சாயத்து தலைவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு வேண்டியஉதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக, தலைவர் ஜி.கே.மணி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலர் திருமாவளவன்,தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், புரட்சிபாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications