மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் நிலச்சரிவு-3 லாரிகள் உருண்டன
Subscribe to Oneindia Tamil
மேட்டுபாளையம்:மேட்டுப்பாளையம் அருகே கன மழையால் மலைப் பாதையில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய 3 லாரிகள்பள்ளதாக்கில் விழுந்து உருண்டன. இதில் சென்ற டிரைவர்கள், கிளீனர்கள், மற்றவர்களின் கதி என்ன ஆனதுஎன்று தெரியவில்லை.
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குன்னூர் மற்றும்மேட்டுபாளையம் பகுதிகளில் மலைப் பாதையில் பல இடங்களில் நிலசரிவுஏற்பட்டது.
பாறைகள் உருண்டு விழுந்தன. சாலையே பள்ளத்தாக்கில் சரிந்துவிட்டது.
பத்தடி பாலம் என்ற இடத்தில் ஏற்பட்ட நில சரிவு ஏற்பட்டபோது அந்த இடத்தைகடந்து கொண்டிருந்த 3 லாரிகளும் சரிந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டன.
அந்த லாரிகள் பள்ளத்தில் உருண்டு கிடக்கின்றன. இதில் சென்றவர்கள் கதி என்னஎன்று உடனடியாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு போலீசாரும் தீயணைப் படையினரும் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications