காதலால் கர்ப்பம்-மகள், மனைவி, காதலனின் தந்தையை கொன்ற தந்தை
தொண்டி:காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள், மனைவி மற்றும் மகளின் காதலனின் தந்தையைகொலை செய்தார் தந்தை.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கோனேரியேந்தலைச் சேர்ந்த மாட்டுவியாபாரி மகாலிங்கம் (42). இவரது மனைவி ரத்தினவள்ளி(35), மகள் நித்யா (20).மேலும் இரு மகன்களும் உள்ளனர்.
நித்யா, அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் ரஞ்சித்தை காதலித்தார்.இதை மகாலிங்கம் ஏற்கவில்லை. நித்யாவும்-ரஞ்சித்தும் தொடர்ந்து உடலுறவும்வைத்துக் கொண்டதால் நித்யா கர்ப்பமானார். இதையடுத்து ரகசியமாய் நித்யாவைமருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்தார் ரத்தினவள்ளி.
இந்த தகவலை அறிந்த தந்தை மகாலிங்கம் கடும் ஆத்திரம் கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை போதையில் வீட்டுக்கு வந்தார் மகாலிங்கம். அப்போதுகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை தாக்கினார்.
அப்போது மகளுக்கு ஆதரவாக ரத்தினவள்ளி பேசினார். இதனால் அவர்களுக்குள்தகராறு ஏற்பட்டது.
போதையில் இருந்த மகாலிங்கம் ஆத்திரமடைந்து அரிவாளால் மனைவியின்கழுத்தை வெட்டினார். இதில் அவர் அங்கேயே சரிந்து விழுந்து பிணமானார்.
இதையடுத்து மகள் நித்யாவையும் கழுத்தை வெட்டி கொலை செய்தார். அத்தோடுஆத்திரம் தணியாத மகாலிங்கம், நித்யாவை தூக்கில் தொங்கவிட்டார்.
அதே ஆவேசத்தோடு கையில் அரிவாளை எடுத்த மகாலிங்கம் வெளியே ஓடி வந்தார்.நித்யாவை காதலித்த ரஞ்சித்தின் வீட்டை நோக்கி ஓடினார்.
அங்கு ரஞ்சித்தின் தந்தை சுந்தரம் மட்டுமே இருந்தார். அவரை ஓட ஓட விரட்டியமகாலிங்கம், அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தார். இதில் சுந்தரம் அதே இடத்தில்ரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமானார்.
இதையடுத்து சுந்தரத்தின் உடலை தூக்கி வயலில் வீசிவிட்டு திருவாடானை காவல்நிலையத்துக்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தார் மகாலிங்கம்.
கொலையான சுந்தரம் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில்ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பீதியும் பதற்றமும் நிலவியது. சம்பவம்நடந்த இடத்தை திருவாடானை எஸ்பி ஸ்டான்லி தலைமையிலான அதிகாரிகள்பார்வையிட்டனர்.
போலீசாரிடம் மகாலிங்கம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,
என் மகளை பருவர் கோளாறு காரணமாக காதலில் வீழ்த்தியுள்ளான் ரஞ்சித். மேலும்அவளை கர்ப்பமடையவும் செய்துவிட்டான். இதை என மனைவி மூடிமறைத்துவிட்டாள்.
கர்ப்பத்துக்குக் காரணமான ரஞ்சித்தின் தந்தையிடமே பணம் வாங்கிக் கொண்டுகர்ப்பத்தை களைத்துள்ளார் என் மனைவி. இதன் மூலம் என் குடும்ப மானத்தையேவாங்கிவிட்டார்கள் மகளும் மனைவியும்.
மானம் போன பின் வாழ்வது அவசியமில்லை என்று தான் இருவரையும் கொன்றேன்.என் குடும்ப மானம் போக காரணமாக இருந்த ரஞ்சித்தை வெட்டப் போனேன். அவன்இல்லாததால் அவனது அப்பாவை வெட்டிக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications