சிபிஐயிடம் மாட்டிய தபால்துறை அதிகாரி-பியூன்
திருவள்ளூர்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போஸ்ட் மாஸ்டரை மீண்டும் பதவியில் அமர்த்த ரூ. 20,000 லஞ்சம் வாங்கியஉதவி தபால் கண்காணிப்பாளர் மற்றும் அவரது உதவியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கிள்ளனூர் கிளை தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருந்தவர் சாந்தா தேவி.இவர் சில குற்றச்சாட்டுக்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவரை அணுகிய உதவி தபால் கண்காணிப்பாளர் கருணாகரன், தனக்கு ரூ. 20,000 பணம் கொடுத்தால், மீண்டும்பணி நியமன உத்தரவை வழங்குவதாக கூறியுள்ளார். சரி என்று சாந்தா தேவி கருணாகரனிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிபிஐயின் ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் கொடுத்தயோசனைப்படி கிள்ளனூர் கிராமத்திற்கு கருணாகரனை வரச் சொன்னார் சாந்தா தேவி.
கருணாகரனும், தனது உதவியாளர் கோபாலுடன் பணத்தைப் பெறுவதற்காக அங்கு சென்றார். கருணாகரனிடம்சாந்தா தேவி ரூ. 20,000 பணத்தை வழங்கினார். அப்போது மறைந்திருந்த மணி தலைமையிலான சிபிஐபோலீஸார்இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இருவரும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர்சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications