குடித்து விட்டு கார் ஓட்டிய மாணவர்களுக்கு அடி
சென்னை:சென்னையில் குடி போதையில், தாறுமாறாக கார் ஓட்டி சிறுவனை படுகாயப்படுத்திய நான்கு கல்லூரிமாணவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை அடையாறு பகுதியில் நேற்று இரவு ஒரு கார் படு வேகமாக வந்தது. இதைப் பார்த்த சாலையில்சென்றவர்கள் பயந்து பிளாட்பாரத்தில் பதுங்கினர். தாறுமாறாக வந்த அந்த கார் சாலையோரம் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சில சிறுவர்கள் மீது மோதியது.
இதில் அந்த சிறுவர்கள் சில அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவனின் கை ஒடிந்துபடுகாயமடைந்தான். பின்னர் அந்தக் கார் தொடர்ந்து நிற்காமல் தாறுமாறாக ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்புக்கம்பியில் மோதி நின்றது.
இதைப் பார்த்த பொதுமக்கள் கோபமடைந்து அந்த காரை நோக்கி விரைந்து வந்து உள்ளே இருந்த நான்குபேரையும் அடித்து உதைத்து வெளியே கொண்டு வந்தனர். நான்கு பேரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களை அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில்நான்கு பேரும் தனியார் கல்லூரி ஒன்றின் மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
படுகாயமடைந்த சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது நிலைகவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தாறுமாறாக கார் ஓட்டி 6 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும்இரவில் தாறுமாறாக கார் ஓட்டி சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications