ஆஸி. கிரிக்கெட் ரசிகர்களின் இனவெறி

Subscribe to Oneindia Tamil

சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மாண்டி பனீசார் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் குறித்து ஆஸ்திரேலியகிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி கருத்துக்களை வெளியிட்டு அவமதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளது. அதற்குமுன்னதாக இங்கிலாந்து அணி சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது.

நியூ செளத் வேல்ஸ் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்துவருகிறது. இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் பனீசரும், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த வெள்ளையரானகெவின் பீட்டர்சனும் இடம் பெற்றுள்ளனர். பனீசர் ஒரு சீக்கியர் ஆவார்.

கான்பெர்ரா நகரில் நியூ செளத் வேல்ஸ் அணியுடன் நடந்த போட்டியின்போது பனீசரையும், பீட்டர்சனையும்ஆஸ்திரேலிய ரசிகர்கள் படு துவேஷமாக விமர்சித்து தங்களது இன வெறியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பனீசர் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரை மிகக் கடுமையான சொற்களால்அர்ச்சித்துள்ளனர். முட்டாள் இந்தியர் என்று அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைசிட்னியிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது.

பனீசரை நோக்கி ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர், ஆங்கிலம் பேசத் தெரியாத மாண்டி, நீ ஒரு முட்டாள்இந்தியன். உனக்கு இங்கே என்ன வேலை? ஆங்கிலேயனே அல்லாத நீ எப்படி இங்கிலாந்து அணிக்காகவிளையாடலாம்? என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாக அந்த செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியர்கள் உலகின் மிகச் சிறந்த இன வெறியர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம். வெள்ளைஇனத்தவர்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பது அவர்களது தாழ்மையான எண்ணம். மற்றயாரையும் அவர்கள் திறமையானவர்களாக அங்கீகரிப்பதில்லை.

ஆஸ்திரேலியர்களின் இனவெறிக்கு இப்போது பனீசர் இலக்காகியுள்ளார். இதற்கு முன்பு இந்திய, இலங்கைவீரர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள கருப்பர் இன வீரர்களும் இதுபோன்றதுவேஷங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பனீசரைப் போல பீட்டர்சனும் இன வெறியர்களின் மோசமான அர்ச்சனையை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியகிரிக்கெட் ரசிகர்களின் இந்த இன வெறி காமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நியூ செளத் வேல்ஸ் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரருமான சைமோன்காடிச் கூறுகையில், இது எனக்கு ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

தனது அணியின் வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் அசிங்கமாக விமர்சித்துள்ளது குறித்து ஆஸ்திரேலியகிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்யப் போவதில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தப் பிரச்சினை குறித்து இங்கிலாந்து அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது வீரர்கள்மோசமாக விமர்சிக்கப்பட்டது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமையை இப்போது பெரிதுபடுத்த விரும்பவில்லை. இருப்பினும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்என்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்த விஷயம் குறித்துக் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இனவெறி எதிர்ப்பு விதிமுறைகளைகடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அவற்றை அமல்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலில் இந்தப்பிரச்சினை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களை அணுகியபோதுதான்நடந்தது குறித்துத் தெரிய வந்தது என்றனர்.

இனவெறி கருத்துக்களை தெரிவித்தாலோ அல்லது பேசினாலோ, வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டாலோ, அந்த நாட்டின் மீது ஆயுட்கால தடை விதிக்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்விதிமுறை கூறுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து வெளிநாட்டு அணிகளும்இந்தப் பிரச்சினையை சந்தித்து வருகின்றபோதிலும் இதுவரை ஆஸ்திரேலியா மீது கடுமையான நடவடிக்கைஎதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ரசிகர்களை கடுமையாக எச்சரித்து பல்வேறுநடவடிக்கைகளை அறிவித்தது. குடித்து விட்டு இனவெறியை வெளிப்படுத்தி கோஷமிடுவது, வீரர்களைஅவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது ஆகியவற்றுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

மேலும் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது.ரசிகர்களை உன்னிப்பாக கவனிக்க பல்வேறு வீடியோ கேமராக்களையும் நிறுவி நடவடிக்கை எடுத்தது. ஆனால்அதையும் மீறி தற்போது இரு வீரர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து வீரர்களை அவமதிப்பது போல நடந்து கொள்ளும் ரசிகர்கள் அடையாளம் காணப்பட்டு கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பீட்டர் சுதர்லேன்ட்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்பு இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களே இனவெறியைவெளிப்படுத்தும் வகையில் கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.

பனீசர் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பும் முன்பே தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், பனீசரை இனவெறிக்கருத்துக்களால் ஆஸ்திரேலியர்கள் சீண்டுவார்கள் என எச்சரித்திருந்தார்.

சிறந்த சுழற் பந்து வீச்சாளராக உருவாகி வரும் பனீசரும், இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டால் எப்படி மனரீதியாகஅதை எதிர்கொள்வது என இங்கிலாந்து மன நல நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டுதான்ஆஸ்திரேலியாவுக்கே வந்துள்ளார்.

எனவே இனவெறியர்களையும் மீறி தனது சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணியை சுழற்றியடிப்பார் எனஅவரது ஆதரவாளர்கள் படு நம்பிக்கையாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+