ஊட்டி நிலச்சரிவு: சீரமைப்புப் பணியில் ராணுவம்
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், ஊட்டி மலைப் பாதையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையிலான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மலைப் பகுதியிலும் நல்ல மழைபெய்து வந்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம், ஊட்டி இடையிலான மலைப்பாதையில், கிட்டத்தட்ட 10 இடங்களில் நிலச்சரிவும், மண் சரிவும், பாறை உருண்டு விழுந்த சம்பவங்களும்நடந்துள்ளன.
கன மழை காரணமாக குன்னூர் மலைப் பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில்கல்லாறு அருகே உள்ள வெள்ளப்பாலம் உள்ளிட்ட 7 சிறு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. மேலும்பல இடங்களில் சாலை அரிப்பும் ஏற்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பெரிய மலைப் பாறைகள் உருண்டு கிடக்கின்றன. நிலச்சரிவில் 2வதுகொண்டையூசி வளைவு முற்றிலும் சேதமடைந்து விட்டது.
கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக குன்னூர்-மேட்டுபபாளையம் இடையேபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3லாரிகள் மலையிலிருந்து விழுந்து நொறுங்கின. இதில் கிளீனர் வினோத்குமார் என்பவர் பரிதாபமாக பலியானார்.
ஒரு லாரி சேதமடைந்த இரும்புப் பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லாரி ஊழியர்கள் 5 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
காட்டாற்று வெள்ளத்தில் பர்லியாறு பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி முற்றிலும் சேதமடைந்தது.வெள்ளப்பெருக்கு, மண் சரிவு ஏற்படுவதை உணர்ந்து சோதனைச் சாவடிக்குள் அமர்ந்திருந்த சப் இன்ஸ்பெக்டர்கவிதா, போலீஸார் கண்ணையன், சங்கர் ஆகியோர் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர்.
இருப்பினும் கண்ணையன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைதீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
இதேபோல, கேரளாவிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 20க்கும்மேற்பட்டோர் பயணித்த வேன் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. உடனடியாக விரைந்து வந்து தீயணைப்புவீரர்களை அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
மலைப் பாதையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான வாகனங்கள்நகர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளன. வாகனங்களில் இருப்பவர்கள் கொட்டும் பனி மற்றும் மழையில் சிக்கிஅவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
சாலையில் உருண்டு கிடக்கும் பாறைகளை அகற்றும் பணியும், மரக் கிளைகள், மண் ஆகியவற்றைஅப்புறப்படுத்தும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இந்தப்பணிகள் நடந்தன.
இன்றைக்குள் பாதையை சரி செய்து விட அதிகாரிகள் திட்டமிட்டு முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா நேரடியாக சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
பாதை சீரமைப்பு பணியில் ராணுவம்:
இந்நிலையில் மலைப் பாதையை சீரமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி பாதையில் நிலச்சரிவு, மண்சரிவை சீரமைக்கும் பணியில் ராணுவ உதவியைநெடுஞ்சாலைத்துறை நாடியது. இதையடுத்து வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள ராணுவ வீரர்கள் சாலைசீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனார்.
இந்தப் பணியில் வெலிங்டன் முகாம் ராணுவ வீரர்களுக்கு உதவ பெங்களூரில் இருந்து ராணுவத்தின் என்ஜினியரிங்பிரிவுப் படையினர் வந்துள்ளனர்.
இவர்கள் அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலை ரயில் போக்குவரத்து ரத்து:
இதற்கிடையே கடும் நிலச்சரிவினால் கல்லாறு முதல் ஹில் ககுரோவ் வரை மொத்தம் 54 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் பாறைகளையும், மரங்களையும் அகற்றும் வேலையில் தென்னக ரயில்வே ஊழியர்கள் சுமார் 200 பேர்ஈடுபட்டுள்ளனர்.
ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இன்னும் 20 தினங்கள் ஆகும். அதுவரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வேஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர் முகாம்: இங்கு இரவு பகலாக நடந்து வரும் பணிகளை பார்வையிட நெடுஞ்சாலை துறை அமைச்சர் சுவாமிநாதன் முகாமிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications