கருணாநிதிக்கு வைகோ விடும் சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து விட்டு உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல்நடத்த முதல்வர் கருணாநிதி தயாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி, பணத்தின் முலம் பலரை ஏலப்பொருளாக்கி உள்ளாட்சி அமைப்புகளின்தலைவர் பதவிகளை திமுக களவாளடி கொண்டது.

இத்தனையும் செய்து முடித்து விட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் மறைமுக்தேர்தலாக நடத்தப்பட்டதால் பல தவறுகள் நடத்துவிட்டது. இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது என கருணாநிதி கூறியுள்ளார்.

ஏற்கனவே இருந்த தேர்தல் முறைகளை மாற்றி, கூட்டணிக் கட்சிகளுடன் கூட ஆலோசிக்காமல் மறைமுகதேர்தலுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது இந்த அரசு. அத்தனை அராஜகத்தையும் செய்து விட்டு மறைமுக்தேர்தல் முறையில் தவறு நடந்துவிட்டது என மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி.

அப்படியானால் இந்த மறைமுக தேர்தலை ரத்து செய்துவிட்டு நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்த முதல்வர் முன் வரத் தயாரா?

ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கான உள்ளாட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், பலஇடங்களில் நடந்துள்ளது. திருப்பூரை அருகில் உள்ள வேலம்பாளையம் நகர்மன்றத் தலைர் தேர்தலில் மதிமுகவேட்பாளர் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தபோது, திமுகவேட்பாளரும், ரவுடிகளும் வாக்கு சீட்டுகளையும், மினிட் புத்தகத்தையும் கிழித்து எறிந்தனர்.

தேர்தல் அதிகாரியை மிரட்டி, மாவட்ட ஆட்சியர் மூலம் மதிமுக வெற்றி பெற்றதை ரத்து செய்து, மறு தேர்தல்நடத்தி, பணத்தை கொடுத்து, வாக்காளர்களை மிரட்டி திமுக வெற்றி பெற்றுவிட்டதாக தற்போதுஅறிவித்துள்ளது.

அதே போல மதுரை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி முடிவை அறிவித்தபோது லட்சங்கணக்கில் பணத்தை கொடுத்து திமுக வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர். ஆண்டிப்பட்டிஒன்றியத்திலும் இது போல நடந்துள்ளது.

இதை கண்டித்து அறப் போராட்டம் நடத்திய அதிமுக எம்பி தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுவினரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது போல தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் தலித்அல்லாத பொது வேட்பாளரை வெற்றி பெற செய்துவிட்டு, சமத்துவப் பெருவிழா கொண்டாட முதல்வருக்குஅருகதை இல்லை.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+