வேடசந்தூர்: லாரி-கார் மோதலில் 4 பேர் பலி
வேடசந்தூர்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெங்களூரைச்சேர்ந்த தொழிலதிபர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமமூர்த்தி (35) தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை வேடசந்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே, தூத்துக்குடியிலிருந்து உப்புமூட்டைகளுடன் வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் ராமமூர்த்தி, அவரதுமனைவி, உறவினர் மற்றும் கார் டிரைவர் நாகலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் ராமமூர்த்தியின் மகள் ரஞ்சிதா படுகாயம் அடைந்தார். அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி டிரைவர் ஜெய்சங்கர் தப்பி ஓடி விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications