பல கோடி மதிப்பு விமான என்ஜின்கள் மாயம்
சென்னை:சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்களின் என்ஜின்கள்மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஜின்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.
என்.இ.பி.சி. என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் சென்னை விமானநிலையத்தின் 8வது நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பல மாதங்களாக இந்த விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கான வாடகையை என்.இ.பி.சி.நிறுவனம் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நான்கு விமானங்களையும் விமான நிலைய குழுமம்பறிமுதல் செய்தது. இதேபோல தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 3 விமானங்களும் இதேகாரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டன.
வாடகையைக் கட்டினால் விமானங்கள் திருப்பி வழங்கப்படும் என்று என்.இ.பி.சி. நிறுவனத்திற்கு விமானநிலைய குழுமம் பலமுறை கடிதம் அனுப்பியது. இந்த நிலையில், என்.இ.பி.சி. நிறுவனம் தனது விமானங்களைப்பார்வையிட்டது.
அப்போது நான்கு விமானங்களின் என்ஜின்களும் விமானத்தில் இல்லாதது தெரிய வந்தது. இதன் மதிப்பு பலகோடி ரூபாயாகும். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனம், எங்களது விமானங்களின் என்ஜின்களோடுஅவற்றை முழு இயக்க நிலையில் எங்களிடம் ஒப்படைத்தால் வாடகைப் பாக்கியைக் கட்டுகிறோம் என்றுஎன்.இ.பி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்களின் என்ஜின்கள் மாயமாகியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications