பெரியாறு-142 அடியாக உயர்த்த கோரும் ஜெ
சென்னை:முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரைக்கும் நீரைத் தேக்கி வைக்க தமிழகஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாககடந்த 1978ம் ஆண்டு கேரள அரசு குறைத்தது. எனது தலைமையிலான அரசு எடுத்தநடவடிக்கையின் பயனாக, 136 அடியிலிருந்து 142 அடியாக அணையின் உயரத்தைஅதிகரிக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த உத்தரவில், தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் மத்திய நீர் வளக்குழுமத்தின் யோசனைப்படி அணையை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவும்உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கு கேரள அரசு எத்தகைய தடங்கலும்விளைவிக்கக் கூடாது.
மத்திய நீர் வள குழுமத்திற்கு மன நிறைவு அளிக்கும் விதத்தில் அணையைவலுப்படுத்தும் பணி நிறைவேற்றி முடிக்கப்பட்ட பிறகு அணையின் உயரத்தை 152அடியாக உயர்த்தலாம். அதற்கு முன்னர் தனிப்பட்ட வல்லுனர்கள் இந்த அணையைபாதுகாப்பு கோணத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்தத் தீர்ப்பை பயனற்றதாக்கும் முயற்சியில் கேரள அரசு இறங்கி, அவசரச்சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றியது.
இப்பிரச்சினையில் சமரசத்திற்கு இடமில்லை, உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப்படவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் கேரள முதல்வரும், மற்றஅமைச்சர்களும், கர்நாடக காங்கிரஸ் அரசின் பாணியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கமறுத்தனர். இன்றும் அது தொடர்கிறது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் கருணாநிதியும், கேரளாவில் உள்ளமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு நோகாத வகையில், அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி பிரச்சினையை தீர்த்துப் போகச் செய்துள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கேரள அரசுதாக்கல் செய்த மனுவுக்கு, இரு மாநில அரசுகளும் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறுஉச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டி விட்டது. எனவே ஷட்டர்களை இறக்கி 142 அடி வரைதண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படிச் செய்யாததால், உபரி நீர் வீணாக கடலில் போய்க் கலந்து வருகிறது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை அமல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?அதை செயல்படுத்த திமுக அரசு தயங்குவது ஏன்?. அவசர கால நடவடிக்கையாகமத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு வீணாகும் அணை நீரை தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களையும்அந்த நடவடிக்கைதான் பாதுகாக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications