கார்த்திகேசு மனைவி கரீஷ்மாவுக்கு கத்திக் குத்து
சென்னை:மைனர் பெண் ஜமுனாவைக் கடத்தி கல்யாணம் செய்து கொண்டதாக சமீபத்தில் சிக்கி, சிறையில்அடைக்கப்பட்டுள்ள மலேசிய இளைஞர் கார்த்திகேசுவின் மனைவி கரீஷ்மாவை, ஜமுனாவின் தாயார் சரளாகத்தியால் குத்தியதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேசு தன்னை மலேசியாவில் விபச்சாரத்திற்குத் தள்ளிசித்திரவதைப்படுத்தியதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் கரீஷ்ா. இந்த வழக்கு விசாரணையில்இருந்தபோதே இருவரும் சமரசமாகிச் செல்வதாக கூறி வழக்கை திரும்பப் பெற்றனர்.
பின்னர் இருவரும் வண்ணாரப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளர் சரளாவின் மைனர் மகளான ஜமுனாவை தனது காதல் வலையில்வீழ்த்தினார் கார்த்திகேசு.
பின்னர் ஜமுனாவை கூட்டிக் கொண்டு தலைமறைவானார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கார்த்திகேசுவையும், ஜமுனாவையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
பின்னர் இருவரையும் விஷம் குடித்த நிலையில் சென்னையில் வைத்து மடக்கினர். சிகிச்சைக்குப் பின்னர்கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் சரளா குடும்பத்துக்கும், கரீஷ்மாவுக்கும் இடையே மோதல்உருவானது.
கார்த்திகேசு கைதான பின்னர் கரீஷ்மா தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார். இந்த நிலையில் நேற்று தனதுவண்ணாரப்பேட்டை வீட்டுக்கு கரீஷ்மா வந்தார். வீட்டைக் காலி செய்த் விட்டுச் செல்லும் நோக்குடன் அவர்வந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த சரளா, நீதான் எனது குடும்பத்தை சீரழித்தவள், உன்னால்தான் எங்களது நிம்மதி போய்விட்டது என்று கூறி கரீஷ்மாவுடன் சண்டை பிடித்துள்ளார். சண்டை முற்றவே இருவரும் கைகலப்பிலும்இறங்கினர்.
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரளா, அரிவாள் மனையால் கரீஷ்மாவை வெட்டியுள்ளார். இதனால்கரீஷ்மாவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கரீஷ்மா போலீஸில் புகார் கொடுத்தார். அவரைசிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸார் சேர்த்துள்ளனர்.
ககீஷ்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications