ராஜபக்ஷே- டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்
சென்னை:இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதிடெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் உயர் நிலைக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. வைகோ தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எல்.கணேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தும், ஈழத் தமிழர்கள்அனாதைகள் அல்லர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் வருகிற 27ம் தேதிடெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
2. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் 17ம் தேதியான, நாளைஅமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கு காவல்துறை அனுமதிமறுத்துள்ளது. இருப்பினும் அதை மீறி அமைதியான முறையில், துளியும்வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்தப்படும்.
காலை 10 மணிக்கு மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிலிருந்து ஊர்வலமாககிளம்பி டிடிகே சாலை வரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
3. யாழ்ப்பாணம் மக்கள் பரிதவிக்கும் நிலையை மாற்ற ஏ9 நெடுஞ்சாலையைஉடனடியாக திறக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்தவேண்டும்.
4. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிஷ்ட ஈடு வழங்க வேண்டும்என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-இலங்கை விமானப் படைக்கு இந்தியா பயிற்சி:
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகரில் இலங்கை விமானப்படையினருக்கு, மிக் 27 ரக போர் விமானங்களை கையாளுவது குறித்த பயிற்சிஅளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இலங்கைவிமானப்படையும், ராணுவம் கொன்று குவித்துள்ளன.
இந்த நிலையில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 6 பேருக்கு சண்டிகரில் போர்விமானங்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
இலங்கை அரசு தனது விமானப்படையின் பலத்தைப் பெருக்கும் முயற்சியில்இறங்கியுள்ளது. தமிழர்கள் மீதான தாக்குதலை வேகப்படுத்தவே இந்த முயற்சியில்இலங்கை இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் ரஷ்யாவிலிருந்து 4 மிக் 27 ரக போர் விமானங்களை இலங்கைவாங்கவுள்ளது. அதற்கு முன்பாக இந்த போர் விமானங்கள் தொடர்பானதொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்காக தனது வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
மொத்தம் 3 மாத பயிற்சிக்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி தற்போது 6பேர் கொண்ட இலங்கை விமானப் படைக் குழுவினர் சண்டிகரில் பயிற்சியில்ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 14ம் தேதி முதல் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. சண்டிகரில் உள்ள தொழில்நுட்ப பயிற்சிப் பள்ளியில் இந்த பயிற்சிவழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குழுவில் இடம் பெற்றுள்ள சர்ஜென்ட் பெரைரா கூறுகையில், மிக் 27 ரகபோர் விமானங்களில் உள்ள மின் இணைப்புகள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சியைநாங்கள் பெற்று வருகிறோம். மொத்தம் 6 பேர் குழுவில் உள்ளோம் என்று கூறினார்பெரைரா.
அடுத்த ஆ ண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி வரை இந்தப் பயிற்சி முகாம் நீடிக்கவுள்ளது.இலங்கையிலிருந்து வந்துள்ள 3வது குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
குழுவில் இடம்பெற்றுள்ள இன்னொரு வீரரான சிறுகுணசிங்கே கூறுகையில், கடந்த1999-2000ம் ஆண்டில் பாகிஸ்தான் விமானப் படையிடம் இலங்கை விமானப்படையின் ஒரு குழு, போர் விமானங்களை இயக்குவது தொடர்பான அடிப்படைபயிற்சியை பெற்றது என்றார்.
இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி முகாமை, இந்திய விமானப்படையின் மேற்குப் பிராந்திய கமாண்டர் ஏர் மார்ஷல் ஏ.கே.சிங் நேரில் பார்த்துஇலங்கை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
சண்டிகரில் உள்ள தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளியில், மிக் 27, மிக் 29 ரக போர்விமானங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்டுவருகின்றன. நாட்டிலேயே இங்குதான் இத்தகைய பயிற்சி வகுப்புகள்நடைபெறுகின்றன.
இலங்கைக் குழுவினர் சண்டிகரில் பயிற்சி பெறுவதற்காக வந்த அக்டோபர் 14ம்தேதியன்றுதான் இலங்கையின் செஞ்சோலை சிறார்கள் முகாம் மீது விமானப்படைவெறித் தாக்குதல் நடத்தி 55 சிறுவர்களை படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.இந்த சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்தன. ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானும் கடும் கண்டனம்தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயுத உதவிகளையும்,தொழில்நுட்ப உதவிகளையும் அளிக்கக் கூடாது என தமிழக கட்சிகள் மத்திய அரசைவலியுறுத்தின.
ஆனால் செஞ்சோலை சம்பவம் நடந்த நாள் முதல் இன்று வரை இலங்கை விமானப்படையினருக்கு போர் விமானம் குறித்த முக்கியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவிராஜ் உடல் தகனம்:
இதற்கிடையே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. நடராஜா ரவிராஜின்உடல் சாவகச்சேரியில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கொழும்பில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்த ரவிராஜ் சில நாட்களுக்குமுன்பு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜின் படுகொலைச் சம்பவம்இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தசம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட ரவிராஜின் உடலுடன், இலங்கை அரசையும், பாதுகாப்புப்படையினரின் படுகொலைக் தாக்குதல்களையும் கண்டித்து கொழும்பில் பிரமாண்டபேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ரவிராஜின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது. அங்குபொதுமக்கள் பார்வைக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானதமிழர்கள் ரவிராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர்ரவிராஜின் உடல் சாவகச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்குள்ள டிரைட்பெர்க் கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிசெலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள்ரவிராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் பிற்பகல் 1 மணியளவில்கண்ணாடி பேட்டை மயானத்திற்கு ரவிராஜின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிதைக்கு ரவிராஜின்12 வயது மகன் தீ வைத்தார். இதற்கிடையே இலங்கை ராணுவ உளவுப் பிரிவின்தூண்டுதலின் பேரில், ஈழ மக்கள் புரட்சிகர கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ரவிராஜைக்கொன்றிருக்க வேண்டும் என்று ரவிராஜின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ரவிராஜா சாவகச்சேரிக்கு வந்தபோது இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருபோராளி, கைத் துப்பாக்கியுடன் ரவிராஜாவைத் தேடியதாக அவர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் ரவிராஜா சாவகச்சேரிக்கு வந்திருந்தார்.அப்போது ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஒருவர், கைத் துப்பாக்கியுடன்ரவிராஜாவின் வீட்டுக்கு வந்து அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டுள்ளார்.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பி விட்டார். அப்போது வீட்டில் ரவிராஜா இல்லைஎன்பதால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். தற்போதும் அதே நபர்தான்ரவிராஜவை கொன்றிருக்க வேண்டும். இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவுதான்அவரை அனுப்பி வைத்ததாக சந்தேகப்படுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications