பெரியாறு அணை: துரைமுருகன் நேரில் ஆய்வு
சென்னை:முல்லைப் பெரியாறு அணையை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சென்றுஆய்வு செய்தார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், குறைக்கப்பட்ட கொள்ளளவான 136 அடியைஅணையின் நீர் மட்டம் தாண்டியது.
இதையடுத்து அணைக்கு வரும் அபரிமிதமான நீர் காட்டாறுகள் மூலம் இடுக்கி அணைக்கும், வைகைஅணைக்கும் திருப்பி விடப்படுகிறது. பொங்கிப் பெருகி ஓடி வரும் இந்த தண்ணீரால் தேனி-கொல்லம்இடையிலான வன சாலை இறைச்சல் பாலம் அருகே சேதமடைந்துள்ளது. இதனால் கம்பம்-குமுளி இடையிலானபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணையை நேரில் பார்த்து ஆய்வு செய்யுமாறு அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் முன்னிலையில் கேரள அரசுடன் நடைபெறவுள்ளபேச்சுவார்த்தைக்கு உதவும் வகையில், அணையை நேரில் சென்று ஆய்வு செய்ய துரைமுருகனை முதல்வர்பணித்தார்.
அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்ய துரைமுருகன்நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மதுரை கோட்ட தலைமைப் பொறியாளர் உள்ளிட்டபொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் சென்றனர்.
மண் அடைப்பால் வந்த சோதனை:
இதற்கிடையே, கூடுதலாக வரும் நீரை முடிந்த அளவுக்கு தமிழகப் பகுதிக்குள் திருப்பி அதை வைகை அணைக்குகொண்டு செல்லும் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து கூடுதல் நீர் வந்து கொண்டுள்ளது. 136 அடி நீர் மட்டத்திற்கு மேல்தேக்கி வைக்க வேண்டாம் என தமிழக அரசு பொதுப்பணித்துறையினரை அறிவுறுத்தியுள்ளது.
எனவே கூடுதலாக வரும் நீரை தமிழக பகுதிக்குள் திருப்பி அதை வைகை அணைக்குக் கொண்டு செல்லபொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மின்சாரம் உற்பத்தி செய்யும் நீண்ட குழாய்கள் மூலம் அணையிலிருந்து தண்ணீரை உறிஞ்சஅதிகாரிகள் முயன்றனர். ஆனால் அந்தக் குழாய்களில் மண் அடைத்திருப்பதால் தண்ணீரை அக்குழாய்கள் மூலம்எடுக்க முடியவில்லை.
இதையடுத்து காட்டாறுகள் மூலமாக தண்ணீரை திருப்பி விட்டனர். அந்தத் தண்ணீர் வைகை அணைக்கு சென்றுகொண்டுள்ளது. இருப்பினும் இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் காரணமாக, இறைச்சல்பாலம் அருகே குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மண் அரித்து சேதமடைந்து விட்டது.
இந்தப் பாதை முற்றிலும் சேதமடைந்தால் கேரள மாநிலம் குமுளிக்கு செல்வது கடுமையாக பாதிக்கப்படும்.இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் காட்டாறுகள் மூலம் திருப்பி விடப்பட்ட தண்ணீர்தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல மின் குழாய்களில்ஏற்பட்டுள்ள் மண் அடைப்பையும் அதிகாரிகள் சரி செய்து வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதை விட்டு விட்டு முடிந்தவரை அதிக அளவு தண்ணீரை எடுக்கமுயற்சியுங்கள் என்று தமிழக அரசு தங்களுக்கு நெருக்குதல் தருகிறது. எங்களால் முடிந்தவரை முயற்சித்துப்பார்த்து விட்டோம்.
மின் குழாய்களில் இந்த அளவுக்கு மண் அடைப்பு இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதையும்சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அனைத்து வழிகளிலும் நாங்களும் தண்ணீரை எடுக்கத்தான் முயற்சித்துவருகிறோம். இருப்பினும் அரசின் இந்த உத்தரவை முழுமையாக நிறைவேற்றுவது மிகவும் கடினமானது என்றுபொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் அதிருப்தியுடன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமக்கு சாதகமாக கிடைத்துள்ளது. எனவே 136 அடியைத்தாண்டி நீரைத் தேக்கினால் அதை கேரளா அரசால் தடுக்க முடியாது. இதை தமிழக அரசு தவற விட்டு விட்டதுஎன்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நிவாரண முகாம் அமைக்கும் பணி தீவிரம்:
இதற்கிடையே பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியதையடுத்து பாதுகாப்பு கருதி நிவாரண முகாம் அமைக்கும் பணியில் கேரளம் தீவிரமாகஉள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வருபவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். குமுளிபீர்மேடு, குட்டிகானம் உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் கேரள அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடற்கரையோர காவல் படை ராணுவம், கப்பல்படைஉள்ளிட்ட படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து 13 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications