வயிறு எரியும் கும்பல்கள்- கருணாநிதி தாக்கு
சென்னை:அதிகாரப் பொறுப்புக்கு, ஆட்சிப் பொறுப்புக்கு நடைபெறும் எல்லாத் தேர்தல்முறைகளும் அப்பழுக்கற்றவையல்ல. ஏதேனும் ஓரிரு குறைகள் எழலாம் எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சென்னையில் விமர்சனகூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்துமுதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு திட்டம் தொடக்கம், நல்லாட்சி நடக்கிறது என்றுபாராட்டு, புகழ் மாலை. இதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை சில பேருக்கு.முறைப்படி அனுமதி பெற்று கூட்டம் நடத்த முன் வராமல் பிறகு அவர்களே அந்தக்கூட்டத்தை நடத்தாமல் நிறுத்திவிட்டு, பழியை அரசின் மீது போடுவார்கள்.இதோ அனுமதி, எப்போது வேண்டுமானாலும் கூட்டத்தை நடத்துக என்று சொன்னபிறகு ஒருவாரத்தில் மீண்டும் நடத்துவோம் என்று சொன்னார்கள். அப்படி நடத்தாமல்மூன்று வாரம் கழித்து, முதலில் கலந்து கொள்வதாக விளம்பரம்செய்யப்பட்டவர்களில் பாதி பேர் இல்லாமலேயே நடத்தியுள்ளனர்.
பத்து நாளைக்கு சேர்ந்தாற்போல் ஒரு நிறுவனத்தில் பணியாற்றாதவர்கள்,நன்றியென்றால் எந்தக் கடையில் விற்குமென்று கேட்பவர்கள் எந்தக் கட்சியிலாவதுஇடம்பிடித்து அந்தக் கட்சித் தலைமையையே ஆக்கிரமிக்கத் திட்டமிடுபவர்கள்,
ஒரு அமைப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே அங்கே முடிந்தவரை சம்பாதித்துக்கொண்டே அந்த அமைப்பு பற்றி அயலாரிடம் அவதூறு பேசுகிறவர்கள், யாராவதுநம்மை அழைத்து பேசச் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கித் தவிப்பவர்கள் என்றுஇப்படியொரு கும்பலை கூட்டி வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொள்கை மறவர் கொட்டிய குருதியை குழைத்துக் கட்டிய இந்த கோட்டையைஇடித்திடக் கிளம்பியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அந்த மன்றங்களில் மண்டலக் குழுக்கள்,நிலைக்குழுக்கள்கூட அமைந்து விட்டன. ஆனால், இந்த கும்பலுக்கு வயிறு எரிவதைஅடக்கிக் கொள்ள முடியவில்லை.
அதிகாரப் பொறுப்புக்கு, ஆட்சிப் பொறுப்புக்கு நடைபெறும் எல்லாத் தேர்தல்முறைகளும் அப்பழுக்கற்றவையல்ல. ஏதேனும் ஓரிரு குறைகள் எழலாம்,எழக்கூடும். அதையும் எச்சரிக்கையுடன் கவனித்து இனி திருத்திக் கொள்ள வழி காணஇயலும்.
இப்போது நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 155 வார்டுகளிலுமாவன்முறை? குறைபாடு? தவறு? இல்லை சில வார்டுகளில் மட்டுமே. அதிலும் சிலபூத்களில் மட்டுமே. ஆனால், அந்தக் கூட் டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தில் நடந்ததுஉள்ளாட்சித் தேர்தலே கிடையாது என்று முழங்கியிருக்கிறார்கள்.
அப்படி நடந்ததாக புகார் தரப்பட்ட சில இடங்களில் கூட மறு தேர்தலுக்குஉத்தரவிடப்பட்டு நடந்து முடிந்திருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications