புலிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை
கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆயுதம் கடந்த இந்திய மீன் பிடிக்கும் படகுகளை இந்தியா கொடுத்து உதவுவதாக இலங்கைஅரசு கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
ஜெனீவா பேச்சு வார்த்தை தேல்விக்கு பின் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேகடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகளின் படகுகளை நாங்கள் மூழ்கடித்து வருகிறோம்.விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளை கொடுத்து ஆயுதம் கடத்த இந்தியா உதவி செய்து வருகிறதுஎன்றார்.
மீண்டும் பேச்சுக்கு அழைப்பு:
இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பேசுகையில், இலங்கையில் அமைதியை எற்படுத்தவிடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
மனித உரிமை மீறல்கள்-இங்கிலாந்து
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களும், மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதும் அதிகரித்துள்ளது என்று கொழும்புவந்துள்ள இங்கிலாந்து நாட்டு சிறப்புத் தூதர் பால் மர்பி கூறியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் அமைச்சர் பால் மர்பி. வடக்கு அயர்லாந்துப் பிரச்சினையின்போது இங்கிலாந்து அரசால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளில்பால் மர்பிதான் அரசு சார்பில் பங்கேற்றார்.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் வேண்டுகோளின் பேரில், பால் மர்பி சிறப்புத் தூதராக இலங்கை வந்துள்ளார். இலங்கைத் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்தமர்பி, கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வனை சந்தித்துப் பேசினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வடக்கு அயர்லாந்துப் பிரச்சினையின்போது காணப்பட்ட அதே நிலைதான் தற்போது இலங்கை இனப்பிரச்சினையிலும் நிலவுகிறது.
மனித உரிமை மீறல்களும், மனிதாபிமான உதவிகள் மறுப்பும் இலங்கையில் தற்போது நிலவுகிற. இப்பிரச்சினை தொடர்பான அமைதி முயற்சிகளில்இவற்றையும், மொழி மற்றும் அரசியல் சட்ட பிரச்சினைகளையும் சேர்த்து அமைதிக்கு முயல வேண்டும்.
வடக்கு அயர்லாந்துப் பிரச்சினையில் 3500 பேர் உயிரிழந்தனர். இலங்கை இனப் போரில் 65,000 பேர் உயிரிழந்துள்ளனர். இரு பிரச்சினைகளும்கிட்டத்தட்ட ஒன்றுதான். பல ஒற்றுமைகள் உள்ளன.
மனித உரிமை மீறல், பாரபட்சம் ஆகியவை வடக்கு அயர்லாந்துப் பிரச்சினையில் பிரதானமாக இருந்தது. இங்கும் அதேதான் காணப்படுகிறது. இருதரப்பினராலும் இந்தப் போரில் வெற்றி பெற முடியாது என்றார் மர்பி.
இலங்கையில் அரசுத் தரப்பு மற்றும் புலிகள் தரப்பினருடன் பேசிய பேச்சுவார்த்தை விவரங்களை ஒரு அறிக்கையாக பிரதமர் பிளேரிடம் நாடு திரும்பியபின்னர் மர்பி அளிக்கவுள்ளார்.
இதற்கிடையே, கருணா பிரிவுக்கு பிள்ளை பிடித்துக் கொடுக்கும் வேலையில் இலங்கை ராணுவம் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா. சிறப்புத் தூதர் ஆலன் ராக் குற்றம்சாட்டியிருப்பது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான கெஹலியே ரம்புகவெல்லா கூறுகையில், இதுதொடர்பானஆதாரங்களை தருமாறு ஆலன் ராக்கிடம் கோரியுள்ளோம் என்றார்.
ரவிராஜ் கொலைக்கு கம்யூ. கண்டனம்:
இந்த நிலையில், தமிழ் எம்.பி.நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய ஒரு கொடூர நிகழ்வு என்றுஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இக்கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரா கூறுகையில், பட்டப் பகலில் மிகக் கொடூரமாக இந்தக் கொலை நடந்துள்ளது. கொலையாளி பலத்தபாதுகாப்பையும் மீறி தப்பியுள்ளான். அரசு இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்றார் குணசேகரா.
இதற்கிடையே, தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவியின் தலைவரான ஸ்ரீரங்காவுக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கொழும்பு டிஐஜி புஜிதா ஜெயசுந்தராஎச்சரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்தி டிவியின் தலைவரான ஸ்ரீரங்கா, அத்தொலைக்காட்சியில், வாரந்தோறும் வெளியாகும் மின்னல் என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறார். தமிழர் பிரச்சினையையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கவனமாக இருக்குமாறும் ஸ்ரீரங்கா அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தாக்குல்-18 புலிகள் பலி:
இதற்கிடையில் இன்று இலங்கை ராணுவ தாக்குலில் 18 விடுதலைப் புலிகள் பலியாகியுள்ளனர்.
இலங்கையில் பல இடங்களில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று நடைபெற்றசண்டையில் 18 விடுதலை புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பு கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications