பெரியாறு: 29ம் தேதி டெல்லியில் பேச்சு
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வருகிற 29ம் தேதி டெல்லியில் தமிழக, கேரள முதல்வர்கள்,மத்திய அரசின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்இதை ஏற்க மறுத்த கேரள அரசு அம்மாநில சட்டசபையில் அவசரச் சட்ட மசோதாவை நிறைவேற்றி,உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடக்கியுள்ளது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையில், குறைக்கப்பட்ட கொள்ளளவான 136 அடியை நீர்மட்டம்தாண்டியுள்ளது. இதனால் கூடுதலாக வரும் நீர், காட்டாறுகள் மூலம் இடுக்கி அணைக்கும், வைகை அணைக்கும்சென்று வருகிறது. இதில் கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்படும் நீர் அரபிக் கடலில் போய் வீணாக கலந்துவருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கேரள அரசுடன், மத்திய அரசுமுன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை மத்திய அரசும், கேரள அரசும்வரவேற்றன. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தோதான தேதியை தெரிவிக்குமாறு தமிழக முதல்வருக்குமத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன்சோஸ் கடிதம் எழுதினார்.
இதற்குப் பதில் கடிதம் அனுப்பிய கருணாநிதி, 28, 29, 30 ஆகியவற்றில் ஏதாவது ஒரு நாளில்பேச்சுவார்த்தைக்குத் தாம் தயார் என தெரிவித்திருந்தார். இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது 29ம் தேதிபேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ்,முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 29ம் தேதி பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறர்.
இதைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார். அவருடன்பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன்செல்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கேரள குழு பங்கேற்கிறது. மத்திய அரசுசார்பில் நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் தலைமையிலான குழு பங்கேற்கிறது.
கேரளா பிடிவாதம்:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுகேரள முதல்வர் அச்சுதானந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லியில் எனக்கும், தமிழக முதல்வர்கருணாநிதிக்கும் இடையே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெறவுள்ளபேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை சென்று முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடவுள்ளேன். டெல்லி செல்வதற்கு முன்புஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள்களையப்படும்.
முல்லைப் பெரியாறு அணை உயரத்தைப் பொறுத்தவரை அதை உயர்த்துவதில்லை என்பதே கேரள அரசின்நிலை. அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அச்சுதானந்தன்.
அணையின் உயரத்தை அதிகரிக்க மாட்டோம் என்று அச்சுதானந்தன் மீண்டும் திட்டவட்டமாகதெரிவித்துள்ளதால் டெல்லி பேச்சுவார்த்தையின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதுகேள்விக்குறியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications