தங்க வேட்டை நடத்திய போலீஸ் ஏட்டு கைது
சென்னை:கோவையிலிருந்து சென்னைக்கு வந்த நகைக் கடை ஊழியர்களை காரில் கடத்திஅவர்களிடமிருந்து 3 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த சென்னை காவல்நிலைய தலைமைக் காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள ஒரு நகைக் கடையைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த செப்டம்பர்மாதம் நகை செய்வதற்காக தங்கக் கட்டிகளை வாங்க சென்னை வந்திருந்தனர்.அப்போது சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட ஒரு கும்பல் நகைக் கடைஊழியர்களை மறித்து அவர்கள் வாங்கி வைத்திருந்த 3 கிலோ தங்கக் கட்டிகளையும்பறித்துக் கொண்டு தப்பியது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பூக்கடை பகுதியில் இது நடந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் தங்கக் கட்டியைப் பறி கொடுத்தவர்களில் ஒருவர் வழக்கு நிலவரம்குறித்து அறிவதற்காக பூக்கடை காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்ததலைமைக் காவலர் ராமமூர்த்தியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். காரணம்,கொள்ளைக் கும்பலில் ராமமூர்த்தியும் ஒருவராக இடம் பெற்றிருந்ததுதான்.
இதையடுத்து அங்குள்ள போலீஸாரிடம் ராமமூர்த்தியை சுட்டிக் காட்டி இவரும்கொள்ளைக் கும்பலில் இருந்தார் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரண் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமமூர்த்தி உண்மையை ஒத்துக்கொண்டார். மேலும் இதற்கு முன்பு பாண்டி பஜார் பகுதியிலும் ஒரு கொள்ளைவழக்கில் ராமமூர்த்திக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.இதேபோல இன்னொரு வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ராமமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு பல சமூகவிரோதிகளுடனும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட ராமமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த 3 போலீஸார் சென்னையில் நகைக்கடை ஊழியர்களிடம் நகையை திருடிச் சென்ற சம்பவம் காவல்துறையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில சென்னை நகரின் முக்கியக் காவல்நிலையம் ஒன்றில் தலைமைக் காவலராக பணியாற்றிய ஒருவரே கொள்ளையடித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications