வீணாய் போனவர்களும் விஜய்காந்தும்- திருமா
சென்னை:வீணாய் போனவர்கள் தான் விஜய்காந்தின் தேமுதிகவில் போய் சேருகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள்பொதுச்செயலாளர் திருமாளவன் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்திய அவர் பேசுகையில்,
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம்கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களிலும் சிக்கல் இல்லாமல் தேர்தலை நடத்தி முதல்வர்வெற்றி கண்டுள்ளார். அரசு நினைத்தால் எவ்வளவு கடினமான, சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இலங்கை தமிழ் மக்களை கருணாநிதி எதிராக பார்க்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளுக்கும்கருணாநிதிக்கும் இடையே ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே யாழ்ப்பாண சாலையை அடைத்து வைத்து 6 லட்சம் தமிழர்களை பட்டினிகொடுமைக்கு தள்ளியுள்ளார். இதனால் ஒருவர் பலியான செய்தியும் வந்துள்ளது.
இந் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களைஇந்திய அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை இலங்கை அரசு மூலமாகஅனுப்பினால் அதை இலங்கை அரசே கைப்பற்றி கொள்ளும்.
எனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழ் மக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக அனுப்ப வேண்டும் எனஇந்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசு தலையிட்டு இலங்கை தமிழர்களைகாப்பாற்ற கருணாநிதி முயற்சித்தால் நிச்சயம் அது நடக்கும்.
கடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் வாக்குகள் விஜய்காந்த் கட்சிக்கு போகவில்லை. திமுக மற்றும் அதிமுகவில்ஓரம் கட்டப்பட்டவர்கள் அவரது கட்சியில் சேர்ந்துள்ளார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனில் இருந்து சமீபத்தில்சேர்ந்த பொன்னுசாமி வரை அப்படித்தான்.
கட்சி நடத்த முடியாதவர்கள், நாலு பேரை வைத்து மேய்க்க முடியாமல் செயலிழந்து போனவர்கள், அரசியலில்விணாய் போனவர்கள் இப்போது விஜயகாந்திடம் சேர்ந்து இருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications