குண்டு: 3 அல்-உம்மாவினருக்கு 8 ஆண்டு சிறை
சென்னை:சென்னை இம்பீரியல் ஹோட்டலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 3 அல்-உம்மாதொண்டர்களுக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில், கடந்த 1996ம் ஆண்டுசெப்டம்பர் 27ம் தேதி இரவு 9 மணியளவில் காபரே நடனம் நடந்து கொண்டிருந்தது.அப்போது சுமார் ஒன்பதரை மணியளவில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் 18 பேர் படுகாயமடைந்தனர். ஹோட்டலின் ஒரு பகுதியும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது காபரே நடனத்தைகண்டித்தே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம நடந்தது தெரிய வந்தது. மேலும் இதைசெய்தது அல்-உம்மாவைச் சேர்ந்த ஏர்வாடி காசிம், நசிருதீன், அப்துல்லாஆகியோர்தான் என்பதும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்த போலீஸார், 3 பேர் மீதும்பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆவடி தியாகராஜன், 3 பேருக்கும் தலா 8 ஆண்டுகள்சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும், இதுவரை சிறையில் இருந்த காலத்தைஇதிலிருந்து கழித்து விட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைக் கேட்டதும் அப்துல்லாவும், நசிருதீனும் வாய் விட்டு அழுதனர். ஆனால்ஏர்வாடி காசிம் இது அநீதியான தீர்ப்பு, இதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றுகூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications