சங்கரராமன்: ஆவணங்களை கலைத்தவர் கைது
காஞ்சிபுரம்:சங்கரராமன் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை, நீதிமன்றத்தின் மேற்கூரையைரப் பிரித்து உள்ளே இறங்கி கலைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குதொடர்பான பூர்வாங்க விசாரணை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்தஆண்டு நடந்தது.
வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பெரிய டிரங்குப் பெட்டியில் வைத்துநீதிமன்றத்துக்குள் வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் ஒரு நாள் காலை நீதிமன்றஊழியர்கள் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தபோது,அறையின் மேல் கூரை ஓடு பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
மேலும், சங்கரராமன் வழக்கு ஆவணங்கள் இருந்த பெட்டி திறந்து கிடந்ததையும்,அதிலிருந்த பல ஆவணங்கள் கலைக்கப்பட்டிருந்ததையும் பார்த்தனர். இதையடுத்துவிஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.
இந் நிலையில் பி.எஸ்.கே. தெருவில் போலீஸார் வழக்கமான காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நபர் மர்மமான முறையில் நடமாடினார். அவரைபோலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அப்போது செல்வம் என்ற அந்த நபர் திடுக்கிடும் தகவலைச் சொன்னார். காஞ்சிபுரம்நீதிமன்ற மேல் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்து வழக்கு ஆவணங்கள் இருந்தபெட்டியைக் கலைத்துப் போட்டது நான் தான் என்றார்.
அந்தப் பெட்டியில் ஏதாவது நகை, பணம் இருக்கலாம், அதைத் திருடிச் செல்லலாம்என்பதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியதாகவும், சங்கரராமன் கொலைவழக்கு ஆவணங்கள் அதில் இருக்கும் என்று எனக்குத் தெரியவே தெரியாது என்றும்அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications