ஈராக் போர் மிகப் பெரிய தவறு: பிளேர்
லண்டன்:ஈராக் மீது போர் தொடுத்தது மிகப் பெரிய தவறு என்று இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி அமெரிக்கா ஈராக் மீதுபடையெடுத்தது. அமெரிக்காவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்த இங்கிலாந்துபிரதமர் பிளேர், அமெரிக்க படைக்கு நிகராக தனது நாட்டு படை வீரர்களையும்போரில் ஈடுபடுத்தினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான அமெரிக்க ஆதரவு படையினரின் கடும்தாக்குதலால் ஈராக் வீழ்ந்தது. சதாம் உசேனும் பிடிபட்டார். ஆனாலும் அமெரிக்காசொன்ன முக்கியக் குற்றச்சாட்டான பேரழிவு ஆயுதக் குவியலில் ஒரு சின்ன இரும்புத்துண்டைக் கூட அமெரிக்கவால் மீட்க முடியவில்லை.
பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்பதை அமெரிக்கா பகிரங்காக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட அத்தகைய ஆயுதங்கள் அறவே இல்லை என்பதை உலகம்புரிந்து கொண்டது. சரி, வந்தது வந்து விட்டோம், வழித்து விட்டு இடத்தைக் காலிசெய்வோம் என்ற அடிப்படையில் ஈராக்கை ரணகளப்படுத்தி வருகின்றன அமெரிக்காதலைமையிலான படைகள்.
தினசரி அங்கு நடைபெறும் சண்டைகளில் அப்பாவி ஈராக்கியர்கள் பலியாகிவருகின்றனர். அமெரிக்காவின் படையெடுப்புக்குப் பின்னர் 6 லட்சத்திற்கும்மேற்பட்ட ஈராக்கியர்கள் உயிரிழந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
இந்த நிலையில் ஈராக் போர் தவறானது என்று பிளேர் பகிரங்கமாக கூறியுள்ளார்.அவரது இந்த ஓபன் ஸ்டேட்மென்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரபுநாட்டுத் தொலைக்காட்சியான அல் ஜசீராவின் ஆங்கில அலைவரிசைக்கு பிளேர்அளித்த பேட்டியில்தான் இவ்வாறு தெரிவித்தார்.
பிளேர் கூறுகையில், ஈராக் மீது நடந்த படையெடுப்பு இதுவரை எந்தவித நல்லவிளைவையும் கொடுக்கவில்லை. இதுவரை நடந்துள்ளது பேரழிவுதான். போர்தவறாகி விட்டது.
திட்டமிட்டதில் ஏற்பட்ட தவறுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம். மேலும்அல்கொய்தா, சன்னி முஸ்லீம்களின் கூட்டு ஒருபுறம், ஈரான் ஆதரவு ஷியாமுஸ்லீம்கள் மறுபுறம், இப்படிப்பட்ட நிலையில் எங்களது இலக்கு குறி தவறிவிட்டது. சமாளிப்பது சிரமமாகி விட்டது.
மொத்தத்தில் சண்டையை விரும்புபவர்கள் பெரும்பான்மையாகவும், அமைதியைவிரும்புபவர்கள் குறைவாகவும் போய் விட்டதால் ஈராக்கில் நிலைமைகட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது என்றார் பிளேர்.
பிளேரின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்நிலையை முழுமையாக ஆதரித்த ஒரே நாடு இங்கிலாந்து மட்டுமே. படைகளையும்உடனேயே அனுப்பி வைத்தார் பிளேர்.
ஈராக் விவகாரத்தில் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட நிலைக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் தங்களது ஆவேசமான பதிலைக் காட்டி விட்டனர். இதனால் புஷ்ஆடிப் போயுள்ளார். இந்த நிலையில், பிளேர் பகிரங்கமாக ஈராக் போர் தவறானது,அது பேரழிவை ஏற்படுத்தி விட்டது என்று கூறியுள்ளது சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பேரழிவு என்ற வார்த்தையை பிளேர் பயன்படுத்தவில்லை என்றுஇங்கிலாந்து பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications